IND vs SL : 'அவர் செய்தது குற்றம்...' அர்ஷ்தீப் படைத்த கொடூர சாதனை ; ஆதங்கப்பட்ட ஹர்திக்!

IND vs SL, Arshdeep Singh No-Ball Controversy : இலங்கை உடனான நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் செய்த செயலானது குற்றம் என இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 6, 2023, 11:18 AM IST
  • இந்திய அணி நேற்று போராடி படுதோல்வி அடைந்தது.
  • இலங்கை அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
  • சூர்யகுமார், அக்சர் படேல் போராட்டம் வீண்
IND vs SL : 'அவர் செய்தது குற்றம்...'  அர்ஷ்தீப் படைத்த கொடூர சாதனை ; ஆதங்கப்பட்ட ஹர்திக்!  title=

IND vs SL, Arshdeep Singh No-Ball Controversy :  இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதன்படி, முதல் போட்டியை இந்திய வென்றிருந்த நிலையில், 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளன. 

போட்டியில், முதலில் பந்துவீசிய இந்திய அணியை, இலங்கை தூள் தூளாக சிதறவிட்டது. மோசமான பந்துவீச்சால், இலங்கையின் விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் தடுமாறியது மட்டுமின்றி, ரன்களையும் கசியவிட்டனர். குறிப்பாக, இந்திய அணி வேகப்பந்துவீச்சில் சிவம் மாவி 53 ரன்களையும், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக் 48 ரன்களையும், இரண்டு ஓவர்களை மட்டும் வீசிய அர்ஷ்தீப் 37 ரன்களையும் வாரி வழங்கினர். 

மேலும் படிக்க | Asia Cup 2023: ஒரே குரூப்பில் இந்தியா-பாகிஸ்தான்! போட்டி நடைபெறுமா?

இதில், அர்ஷ்தீப் சிங் நேற்றைய போட்டியில் 2 ஓவர்களில் மட்டும் 5 நோ-பால்களை வீசி ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்தார். அவர் வீசிய 2ஆவது ஓவரில் 4 நோ-பால்களையும், 19ஆவது ஓவரில் 1 நோ-பாலையும் வீசி அர்ஷ்தீப், ப்ரீ-ஹிட்களின் ரன்களை ப்ரீயாக வழங்கிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் இந்த ஆட்டம் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ரன்களை வழங்குவதில் தவறில்லை என்றாலும் 12 பந்துகளில் 5 நோ-பால்கள் என்றால் அதை மறக்க முடியாது எனவும் கூறி வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது,"நீங்கள் ஒரு நாள் உங்களுக்கு நல்லதாக அமையும். 

சில நாள்கள் மோசமானதாக அமையும். அது பிரச்னையில்லை. ஆனால் நீங்கள் அடிப்படையில் இருந்து விலகிச் செல்லக்கூடாது. இந்த சூழ்நிலையில் அர்ஷ்தீப்புக்கு இது மிகவும் கடினமான ஒன்றுதான். கடந்த காலத்திலும் அவர் நோ-பால்களை வீசியுள்ளார். இது அவரைக் குறை கூறுவது அல்லது அவர் மீது கண்டிப்புடன் நடந்துக்கொள்வதாக ஆகாது. ஆனால் எந்த வடிவ போட்டிகளிலும் நோ-பால் ஒரு குற்றம் என்பது எங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக நோபால் வீசிய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தான். அர்ஷ்தீப் டி20 போட்டிகளில் தற்போது மொத்தம் 14 நோ-பால்களை வீசியுள்ளார். அதே நேரத்தில், அவர் பாகிஸ்தானின் ஹசன் அலி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜோடிகளான கீமோ பால் மற்றும் ஓஷேன் தாமஸை விட முன்னேறி மோசமான சாதனையை படைத்துள்ளார். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி மற்றும் மூன்றாவது டி20 போட்டி, நாளை நடைபெறுகிறது.  

மேலும் படிக்க | ரிஷப் பண்டை காண ஓடோடி வந்தாரா முன்னாள் காதலி... நடிகையின் போட்டோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News