கில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 3ம் இடத்தில் ஏன் விளையாடுகிறார்? ரோஹித் ஷர்மா விளக்கம்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் 3 இடத்தில் பேட்டிங் விளையாடுவதற்கான காரணத்தை இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விளக்கியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 3, 2024, 01:39 PM IST
  • சுப்மன் கில் நம்பர் 3ல் ஏன் விளையாடுகிறார்
  • அவரே விரும்பி எடுத்துக் கொண்ட இடம் அது
  • இந்திய அணியின் கேப்டன் ரோகித் விளக்கம்
கில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 3ம் இடத்தில் ஏன் விளையாடுகிறார்? ரோஹித் ஷர்மா விளக்கம் title=

தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இருக்கும் இந்திய அணி இப்போது அந்த அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஓப்பனிங் இறங்குகிறார். சுப்மன் கில் 3வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஓப்பனிங் விளையாடும் கில், டெஸ்ட் போட்டியில் மட்டும் மூன்றாவது இடத்தில் பேட்டிங் இறங்குவது ஏன் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், 3-ம் இடத்துக்கு வர முடிவு செய்ததற்கான காரணத்தை கேட்டீர்கள் என்றால், இது முழுக்க முழுக்க கில்லின் விருப்பம் என என்றார். டெஸ்ட் துவக்க ஆட்டக்காரராக 33 இன்னிங்ஸில் களமிறங்கிய சுப்மன் கில், 966 ரன்களை எடுத்துள்ளார். அதேநேரத்தில் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியதைப் போல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 33 இன்னிங்ஸ்களை ஒப்பிடும்போது அஸ்வினைவிட மிக குறைவான ரன்களையே அவர் எடுத்திருகிகறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்னும், கடந்த ஆண்டு பார்டர்-கவாஸ்கர் டிராஃபியில் ஒரு சதமும் அடித்தார்.

மேலும் படிக்க | வார்னே சாதனையை இவர் முறியடிக்க வாய்ப்பு உள்ளது - ஆஸி ஜாம்பவான் மெக்ராத் கணிப்பு

இருந்தபோதிலும், கில்லின் செயல்பாடு பெரிதாக இல்லை. இதனால் அவரே தன்னுடைய பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறார். அதன்படி டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் இறங்கிக் கொண்டிருக்கிறார். இது குறித்தும் பேசிய ரோகித் சர்மா, " துவக்கத்தில் ஆடுவதற்கும், 3-ம் இடத்தில் ஆடுவதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. 3-ம் இடத்தில் இருப்பவர் முதல் பந்துக்கு பிறகுகூட விளையாட வேண்டியிருக்கும். 

துவக்க ஆட்டக்காரர் காயமுற்றால், 3-ம் இடத்தில் இருப்பவர் துவக்கத்தில் விளையாட வேண்டிவரும். எனவே, அதில் பெரிய வித்தியாசம் இல்லை. கில் புத்திசாலி. தனது பேட்டிங் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அவர் அந்த இடத்தையே விரும்புகிறார். ரஞ்சி டிராஃபியில் அந்த இடத்தில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் துவக்கத்தில் விளையாடினாலும், அவருக்கு 3-ம் இடம்தான் பிடித்தம். அந்த இடத்தில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறார். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான இடத்தைப் பற்றி தனிப்பட்ட முறையில் சிந்திப்பார்கள்," என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | IND vs AFG: ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணி! முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News