FIFA _2018: பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தி ஃபைனலில் நுழைந்த பிரான்ஸ்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் பிரான்ஸ்!....அரை இறுதியில் பெல்ஜியத்தை 1-0 என அபாரமாக வென்றது!

Last Updated : Jul 11, 2018, 11:23 AM IST
FIFA _2018: பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தி ஃபைனலில் நுழைந்த பிரான்ஸ்! title=

12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் பிரான்ஸ்!....அரை இறுதியில் பெல்ஜியத்தை 1-0 என அபாரமாக வென்றது!

ரஷ்யாவில் 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14 ஆம் தேதி துவங்கிய இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன. பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்தன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ். பெரும் பரபரப்புகளுக்கிடையே நடந்த இப்போட்டியில் வென்ற பிரான்ஸ் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தரவரிசையின்படி மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியும் அரையிறுதியில் மோதின. மைதானம் முழுவதும் இருநாட்டு ரசிகர்களும் குவிந்திருந்தனர். தொடக்கம் முதலே கோல் அடிக்க இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்தன. 

ஆனால், முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனாலேயே இரண்டாம் பாதி பரபரப்படைந்தது. அதன் 51-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து பெல்ஜியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது பிரான்ஸ். அந்நாட்டின், சாமுவேல் உம்டிடி, கார்னர் ஷாட்டை ஹெட் ஷாட் செய்து கோல் ஆக்கினார். இந்த ஒரு கோல் ஆட்டத்தை பிரான்ஸ் பக்கம் கொண்டு வந்து நிறுத்தி, இறுதிப் போட்டிக்குள் நுழையும் கதவைத் திறந்து விட்டது. உலகக் கோப்பை போட்டிகளில் மூன்றாவது முறையாக பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைகிறது. 

 

Trending News