55 ரன்னில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்! எளிதாக வெற்றி பெற்ற இங்கிலாந்து!

ஐசிசி உலக கோப்பை 2021 போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2021, 10:15 PM IST
55 ரன்னில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்! எளிதாக வெற்றி பெற்ற இங்கிலாந்து!  title=

உலக கோப்பை டி20 2021 போட்டிகள் இன்று முதல் துவங்கியுள்ளன. சூப்பர் 12ல் இரண்டாவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. 

முதலில் பவுலிங் தேர்வு செய்தது சிறப்பான முடிவு என்று அமையும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  மேற்கிந்திய தீவுகள் அணியில் இரட்டை இலக்கத்தில் ரன்களை பெற்ற ஒரே வீரர் கிறிஸ் கெயில் மட்டுமே.  13 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார் கெயில்.  இவரை தவிர மற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பரிதாபமாக வெளியேறினர்.  

 

மேற்கிந்திய தீவுகள் அணி 14.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.  இங்கிலாந்து அணி சார்பில் ரசித் 2.2 ஓவர்கள் மட்டுமே வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

மிகவும் சொற்ப ரன்களை இலக்காக வைத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியை வென்றது.  ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் குறைந்த ரன்கள் எடுத்த அணிகளில் மூன்றாவது இடத்தை பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி.  முதல் இரண்டு இடங்களில் நெதர்லாந்து அணி உள்ளது.

 

ALSO READ பதுங்கி பாய்ந்த கங்காரு! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News