நான்காவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்துள்ளது!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 துவங்கி நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடு தனது முதல் இன்னிங்சில் 246 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய துவக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் தவான் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் இந்தியா 19/0 என இருந்தது. தவான் 3 ரன்களுடனும், ராகுல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் பின்னர் நேற்று முன்தினம் இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 273 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ரன்கள் எண்ணிக்கை மூலம் இந்தியா இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் எம்.எம்.அலி ஐந்து விக்கெட்டுகளை பறித்தார்.
Another great day's play in the Test!
The game is finely in the balance as England managed to bat through the day, ending on 260/8 with a lead of 233. @josbuttler top scoring with 69.
What was your favourite moment of the day?#ENGvIND scorecard ➡️ https://t.co/VUru4XV87u pic.twitter.com/IFRR7l2hyP
— ICC (@ICC) September 1, 2018
இதனைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சில் நிலை தடுமாறினர். அணித்தலைவர் ரூட் 48(88), பட்லர் 69(122) நிதானமான விளையாட்டினை வெளிப்படுத்தி அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து குறைய 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 260 குவித்தது.
இரண்டு விக்கெட்டுகளை மீதம் வைத்துள்ள இங்கிலாந்து அணி தற்போதைய நிலைவரப்படி இந்தியாவை விட 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.