இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்துள்ளது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 38-வது லீக் ஆட்டம் எட்க்பாஸ்டன், பிர்மிங்க்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதுவரை விளையாடிய போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒன்றில் முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தனது அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதேவேளையில் இந்தியாவை எதிர்த்து விளையாடும் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் நிலையில், தான் விளையாடவிருக்கும் அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது.
England wn?#CWC19 pic.twitter.com/TI8zPMpbev
— Cricket World Cup (@cricketworldcup) June 30, 2019
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதிலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் 66(57), ஜானி பாரிஸ்டோவ் 111(109) ரன்கள் குவித்து அணிக்கு அபார துவக்கத்தை அளித்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 79(54) ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் மொகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
முன்னதாக பாக்கிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பை கடிமானதாக மாற்ற, இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியடையும் என விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் இன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் மிக மோசமாகவே இருந்தது. முதல்தர பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கி சென்றனர். இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் இந்தியா மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் உண்மை என விவாதிக்கப்படும்...