தோனியின் ராஞ்சி பங்களாவில் இருக்கும் சொகுசு வசதிகள்..!

ராஞ்சியில் இருக்கும் சகல வசதிகளுடன் இருக்கும் தோனியின் பண்ணை வீட்டை கட்ட சுமார் 3 வருடங்கள் ஆனதாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 27, 2022, 04:08 PM IST
  • ராஞ்சியில் இருக்கும் தோனியின் பிரம்மாண்ட பண்ணை வீடு
  • பண்ணை வீட்டில் இருக்கும் சொகுசு வசதிகள்
  • விலங்குகள், வாகனங்ளுக்கு பிரத்யேகமான வசதிகள்
தோனியின் ராஞ்சி பங்களாவில் இருக்கும் சொகுசு வசதிகள்..! title=

இந்திய கிரிக்கெட் அணிக்கு அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையின் கீழ் பல சரித்திரங்களை படைத்த இந்திய அணி, உலகின் நம்பர் 1 அணி என்ற அந்தஸ்தையும் எட்டிப்பிடித்தது. இவ்வளவு புகழுக்கும் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு ராஞ்சியில் இருக்கும் பண்ணை வீட்டில் பெரும்பாலான நேரங்களை செலவிடுகிறார். அந்தவீட்டில் அப்படி என்னென்ன வசதிகளுடன் கட்டியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | அழகில் பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் சகோதரி

பண்ணை வீடு

ராஞ்சியில் இருக்கும் அவரது பண்ணை வீட்டிற்கு கைலாசபதி என்று பெயரிட்டுள்ளார். அந்த பண்ணை வீட்டிற்குள் நீச்சல் குளத்துடன் கூடிய உள் விளையாட்டு அரங்கம் ஒன்று உள்ளது. பிரத்யேகமாக உடற்பயிற்சி கூடம் ஒன்றையும் கட்டியுள்ளார் தோனி. அவருடைய வீட்டில் இருந்து சுமார் 10 நிமிட பயணத்தில் இந்த பண்ணை வீட்டிற்கு செல்ல முடியும். ரசித்து ரசித்துக் கட்டிய இந்த வீட்டின் கட்டடப் பணிகள் முடிவடைய ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆனதாம். பசுமை மாறா அந்த வீட்டில் ஏராளமான புற்செடிகளும், அலங்கார மலர்களும் இருக்கின்றன. விருந்தினர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கென்று பிரத்தேயமான பார்க்கிங் கிரவுண்டும் இந்த பண்ணை வீட்டில் உள்ளது. 

வீட்டிற்கு மஞ்சள் மற்றும் கிரே கலர்களுடன் க்ரீம் கலர்களில் விதவிதமான ஷேடுகளைக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளன. மேற்கத்திய கலாச்சார அடிப்படையில் இருக்கும் இந்த டிசைன்கள் பார்ப்பவர்களை கண்களை பறிக்கிறது. இப்படியான கலர்களை நாமும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட வரும். அங்கு தோனிக்கு பிடித்தமான செல்லப் பிராணிகளும் வளர்க்கப்படுகின்றன. குதிரை மற்றும் நாய்களுக்கு என்று பிரத்யேகமான குடில்கள் அமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பண்ணை வீட்டில் இருக்கும் விலங்குகளுடன் நேரத்தை செலவிடுவார் தோனி. மேலும், மிகப்பெரிய செட் ஒன்றில் தோனியின் பிரத்யேகமான பைகுகள், கார்க்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | T20 WC: ’கலிவர்’ அவதாரம் எடுத்துள்ள மேக்ஸ்வெல்..! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News