மாஹி பேச மாட்டார்... அவரின் பேட் தான் பேசும்: தோனியின் முதல் பயிற்சியாளர்

ஆஸ்திரேலியாவில் தொடரின் நாயகனாக விருது பெற்றதன் மூலம், அவர் தனது விமர்சகர்களுக்கு பதிலளித்துள்ளார் என தோனியின் முதல் பயிற்சியாளர் கேஷவ் ரஞ்சன் பானர்ஜி கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2019, 05:36 PM IST
மாஹி பேச மாட்டார்... அவரின் பேட் தான் பேசும்: தோனியின் முதல் பயிற்சியாளர் title=

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் தொடரில் மாஸ் காட்டிய தல தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்களை அடித்து, இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். கடைசி இரண்டு போட்டிகளில் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து, அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றார். சமூக வலைதளங்களில் தோனியை கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், தோனியின் முதல் பயிற்சியாளர் கேஷவ் ரஞ்சன் பானர்ஜி, அவரை பாராட்டியதோடு, அவரைப் பற்றி விரிவாகப் பேசினார்.

எம்.எஸ். தோனி எப்பொழுதும் நம்பிக்கையை கைவிடுவதில்லை. கடந்த சில நாட்களாக தோனியை வீட்டு அனுப்பு பலர் முயற்ச்சி செய்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், தொடரை நாயகன் விருதை பெற்று, மீண்டும் நிருப்பித்து உள்ளார். அவரை விட சிறந்த "பினிஷர்" அணியில் இல்லை என்று எனக் கேஷவ் ரஞ்சன் பானர்ஜி கூறினார். 

தோனி எப்பொழுதும் விமர்சனங்களுக்கு மற்றும் பாராட்டுக்களுக்கு எதிர்வினை காட்ட, அவருக்கு பழக்கம் இருந்ததில்லை. தோனி அதிகமாக பேச மாட்டார். ஆனால் அவரின் மட்டை பேசும் எனவும் தோனியின் முதல் பயிற்சியாளர் கேஷவ் ரஞ்சன் பானர்ஜி கூறினார்.

ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பு, நான் தோனியிடம் கேட்டேன். உங்கள் மீது பலர் விமர்சனம் வைக்கிறார்கள். அதற்க்கு நீங்கள் ஏன்? பதில் அளிக்க மாட்டீர்கள் என கேள்வி எழுப்பினேன். அதற்கு தோனி என்னிடம், விமர்சனங்களுக்கு ஏன்? பதில் அளிக்க வேண்டும். எப்பொழுது என்னால் 100 சதவீதம் கிரிக்கெட் ஆட முடியவில்லை என்று உணர்கிறனோ.. அன்று நான் கிரிக்கெட்டை விட்டு விலகி விடுவேன்" எனக் கூறினார் என்று  கேஷவ் ரஞ்சன் தெரிவித்தார்.

ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடரின் நாயகனாக விருது பெற்றதன் மூலம், அவர் தனது விமர்சகர்களுக்கு பதிலளித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு ராஞ்சியில் நிறையப் பயிற்சி பெற்றார். மைதானத்தில் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடினார். இவ்வாறு எம்.எஸ். தோனி முதல் பயிற்சியாளர் கேஷவ் ரஞ்சன் பானர்ஜி கூறினார். இவர்தான் தோனியை கால்பந்தில் இருந்து கிரிக்கெட் பக்கம் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News