இந்தியா, தென்னாப்பிரிக்க இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது, மூன்றாவது போட்டி அக். 9, 11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கான மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர் அறிவிக்கப்பட்டார். தீபக் சஹார், தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்பிய அணியில் காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!
தென்னாப்பிரிக்கா உடனான 3ஆவது டி20 போட்டியின்போது, முதுகில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. வலி தொடர்ந்து இருப்பதால், அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று, மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து பும்ரா விலகியிருந்தார். தொடர்ந்து, அவருக்கான மாற்று யார் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பை அணியின் காத்திருப்போர் பட்டியிலில் முகமது ஷமி, தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர்தான் மாற்று வீரராக இந்திய அணிக்கு அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் எதிர்பார்க்கப்பட்டது.
NEWS : Washington Sundar replaces Deepak Chahar in ODI squad. #TeamIndia | #INDvSA
More Details https://t.co/uBidugMgK4
— BCCI (@BCCI) October 8, 2022
ஆனால், ஷமிக்கு போதுமான உடற்தகுதி இல்லை என தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது சஹாருக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை மீண்டும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இவர்கள் இல்லை என்றால் வேறு யாரை பும்ராவுக்கான மாற்று வீரராக பிசிசிஐ அறிவிக்கும் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
இந்திய அணி, டி20 உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும் அக். 23ஆம் தேதி சந்திக்கிறது. முன்னதாக, நான்கு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் மோதும் போர்'களம்' ரெடி; ஆஸ்திரேலியா வெளியிட்ட வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ