பார்ட்டியில் பெண்களிடம் நட்சத்திர வீரர் தவறாக நடந்து கொண்டதால் டெல்லி கேபிடல்ஸ் கடுமையான நடத்தை விதிகளை வெளியிட்டது என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட் கிழமையன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்ற பிறகு நடத்தை விதிகள் வெளியிடப்பட்டன.
ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம், இந்த வெற்றி பெறுவதற்கு சில நாட்களுக்கு முன், ஒரு ஃபிரான்சைஸ் பார்ட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பார்ட்டியில் ஒரு பெண்ணிடம் கிரிக்கெட் வீரர் ஒருவர் முறைகேடாக நடந்து கொண்டதை அடுத்து, அதன் வீரர்களுக்கு கடுமையான நடத்தை வழிகாட்டுதல்களை இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) உரிமையாளரான டெல்லி கேப்பிடல்ஸ், கொண்டு வந்துள்ளது.
இதற்கான ஆணிவேரான அத்துமீறிய வீரர் யார் என்பதும், சம்பவம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், எந்த வகையான மீறலுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும், தவறு செய்பவர்களுடனான ஒப்பந்தங்களை முடித்துக் கொள்வது சரியான தண்டனையாக இருக்கும் என்றும் என்றும் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | CSKயில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை பெற்ற கிரிக்கெட்டர்கள்
தற்போது, ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. ஏழு ஆட்டங்களில் இரண்டு வெற்றி மற்றும் ஐந்து தோல்விகளுக்குப் பிறகு மொத்தம் நான்கு புள்ளிகளைப் பெற்ற டிசி அணி, ஏப்ரல் 29-ம் தேதி டெல்லியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் சீசனின் தொடக்க ஐந்து ஆட்டங்களில் டேவிட் வார்னரின் தலைமையின் கீழ் டெல்லி தோல்வியடைந்ததால் கடினமான நிலைபின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பிளேஆஃப் இடத்தைப் பிடிக்க வேண்டுமானால், அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி உள்ளது.
தற்போது, ஏழு போட்டிகளில் DC நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அவர்களால் மற்றொரு வெற்றியைப் பதிவு செய்ய முடிந்தால், பிளேஆஃப்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | Women Cricket: சீனியர் மகளிர் கிரிக்கெட் அணி தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ
அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (SRH) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறார்கள், சென்னைக்கு செல்வதற்கு முன் MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) விளையாடுவார்கள்.
பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும், அணி இப்போது இந்த ஐபிஎல் லீக்கின் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற இலக்குடன் சனிக்கிழமையன்று சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
ஒரு வெற்றி, அவர்கள் ஐபிஎல் அட்டவணையின் அடித்தளத்தில் இருந்து உயர்த்தப்படுவதைக் காணும் அதே வேளையில், சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வியானது, முதலிடத்தை பிடிக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ICC WTC Final: ரோஹித்துக்கு பதிலாக விராட் கோலி? பரிந்துரைக்கும் ரவி சாஸ்திரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ