முதல் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 295 ரன்கள் குவிப்பு!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்துள்ளது!

Last Updated : Oct 12, 2018, 05:16 PM IST
முதல் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 295 ரன்கள் குவிப்பு! title=

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்துள்ளது!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 12 துவங்கி ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திதீவுகள் அணி ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கிரன் பவுள் 22(30), பர்த்வொயிட் 14(68) ரன்களில் வெளியேற பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் 36(68) ரன்களில் வெளியேறினார்.

ஹெட்மையர் 12(34), சுனில் அம்பிரிஷ் 18(26) ரன்களில் வெளியேற ராட்சன் சேஷ்  98*(174) ரன்களுடன் நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தார். இவருக்கு துணையாக நின்ற ஹோல்டர் 52(92) ரன்களில் வெளியேற இவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவேந்திர பிஷூ நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார்.

தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய அணிகள் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 92 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட், ரவிசந்திர அஷ்வின் 1 விக்கெட் எடுத்துள்ளனர்.

ராட்சன் சேஷ் 98*(174) மற்றும் தேவேந்திர பிஷூ 2(15) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News