IPL 2021: CSK vs SRH: டாஸ் வென்ற SRH அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது

டெல்லி அருண் ஜெயிட்லி மைதானத்தில் இன்று நடக்கவிருக்கும் CSK vs SRH போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற SRH முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 28, 2021, 07:17 PM IST
  • IPL 2021 இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • டாஸ் வென்ற SRH அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.
  • தனது ஐந்தாவது போட்டியில் பெங்களூரு அணியை எளிதாக வென்றது CSK.
IPL 2021: CSK vs SRH: டாஸ் வென்ற  SRH அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது title=

IPL 2021, CSK vs SRH: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இந்த IPL பதிப்பில் தனது ஆறாவது போட்டியில் ஆடவுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று CSK அணி எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாகும். டெல்லி அருண் ஜெயிட்லி மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற SRH அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்சை எதிர்த்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோல்வியுற்றது. 

இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடிய CSK அணி தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆடி, எளிதாக வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை சுலபமாக தோற்கடித்தது சென்னை அணி. 

நான்காவது போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிகொண்டது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் தன் அமைதியைக் காத்த சென்னை அணி அதிரடி வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியும் படு டென்ஷனைக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) எந்த வித சேலஞ்சையும் அளிக்காமல் மளமளவென சுருண்டது. அந்த போட்டியிலிம் சென்னை அனணிக்கு ஒரு சுலபமான வெற்றியே கிடைத்தது. 

ALSO READ: Watch Video: வைரல் ஆகும் 'ராக்ஸ்டார் பிராவோ' வின் கொரோனா விழிப்புணர்வு பாடல்  

டெல்லியில் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் சென்னை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று கடைசி இடத்தில் உள்ளது. 

IPL வரலாற்றிலேயே சென்ற ஆண்டுதான் சென்னை ப்ளே-ஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. IPL-லில் பங்கெடுக்கும் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக CSK இருந்துள்ளது. துவக்க ஆண்டு முதலே, தோற்கடிக்க மிகவும் கடினமான அணி என்ற பெருமையை பெற்றுள்ளது CSK அணி.

கடந்த ஆண்டு மிக மோசமாக ஆடிய CSK அணி, இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக பூர்த்தி செய்யும் என நம்பப்படுகின்றது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரன், டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ராபின் ஊத்தப்பா, சேதேஸ்வர் புஜாரா, கரண் ஷர்மா, மோயின் அலி, ஜேசன் பெஹ்ரென்ற்றோஃப், கிருஷ்ணப்பா கவுதம், லுங்கி நிகிடி, மிச்செ சாண்ட்னர், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த்ம் என். ஜெஹதீசன், கெ.எம் ஆசிஃப், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விராட் சிங், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், ஜகதீஷா சுசித், கலீல் அகமது, சித்தார்த் கவுல், விருத்திமான் சஹா, புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, முகமது நபி, ஜேசன் ராய், ஷாபாஸ் நதீம், ஜேசன் ஹோல்டர், சந்தீப் சர்மா, பசில் தம்பி, முஜீப் உர் ரஹ்மான், பிரியம் கார்க், அப்துல் சமத்

ALSO READ: T20 World Cup: இந்தியாவை விட்டு செல்கிறதா டி-20 உலகக் கோப்பை? கொரோனா எதிரொலி?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News