உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணி; நியூசிலாந்து வெற்றி

நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லுமா? என ரசிகர்கள் ஆவல். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்கும் இந்தியா... ரசிகர்கள் அதிர்ச்சி.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 10, 2019, 07:52 PM IST
உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணி; நியூசிலாந்து வெற்றி title=

19:33 10-07-2019
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் முதல் அரை இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணியக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரோஸ் டெய்லர் 74(90) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டை கைப்பற்றினார். 

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியை காத்திருந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் கே.எல்.ராகுல் (KL Rahul) இருவரும் தலா ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் மூன்றாவதாக வந்த விராட் கோலி (Virat Kohli) ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். 

பின்னர் களம் இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்காததால் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டை இழந்தது. தோனி மற்றும் ஜடேஜா நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். கடைசி நிமிடத்தில் ஜடேஜா 77 ரன்கள் எடுத்து அவுட் ஆக, தோனி மீது அனைவரின் நம்பிக்கை இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆனதால், இந்தியாவின் வெற்றி பறிபோனது. 

இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது


17:51 10-07-2019
30.3 ஓவர் முடிவில் இந்திய அணி தனது ஆறாவது விக்கெட்டை இழந்தது. ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 


17:21 10-07-2019
22.5 ஓவரில் இந்திய ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. நம்பிக்கை அளித்து வந்த இளம் வீரர் ரிஷாப் பந்த் 32(56) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 

 


17:03 10-07-2019
18 ஓவர் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.


16:22 10-07-2019
நான்காவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

 

 


15:53 10-07-2019
3.1 ஓவரில் இந்திய அணி 3வது விக்கெட்டை இழந்தது. இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார்.


15:48 10-07-2019
2.4 ஓவரில் இந்திய அணி 2வது விக்கெட்டை இழந்தது. இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார்.


15:42 10-07-2019
1.3 ஓவரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 1(4) ரன் எடுத்து அவுட் ஆனார்.

 

 


15:27 10-07-2019
இரண்டாவது நாளாக நடைபெற்ற முத்த அரையிறுதி (இந்தியா - நியூசிலாந்து) ஆட்டத்தில், டாஸ் வென்ற பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ரோஸ் டெய்லர் 74(90) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டை கைப்பற்றினார். 

 

இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற 240 ரன்கள் தேவை. இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது.


15:15 10-07-2019
48.1 ஓவரில் 8வது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து அணி. 


15:12 10-07-2019
6வது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. ரோஸ் டெய்லர் 74(90) ரன்கள் எடுத்த நிலையில், ரன்-அவுட் ஆனார்.

 

 


15:02 10-07-2019
தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம். புவனேஷ்வர் குமார் பந்து வீசுகிறார்.

 

 


மான்செஸ்டர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைப்பெற்று வரும் முதல் அரையிறுதி போட்டி மழையின் காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தடைப்பட்ட இடத்தில் இருந்து தொட உள்ளது.

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கிய, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

ஆரம்பம் முதலே இந்தியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தினறிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க துவங்கியது. ஆட்டத்தின் 46.1 ஓவர்கள் வரையில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அந்த சமயத்தில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், மைதானத்தில் ஏற்ப்பட்ட ஈரப்பதம் காரணமாக பந்து சரியாக வீச முடியாது காரணத்தால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

இன்று மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் தொடங்க உள்ளது. ஒருவேளை மழையின் குறுக்கீடு இருந்தால் ஆட்டம் டக்வொர்த் லூயிஸ் (D/ L method) விதிப்படி நடக்க வாய்ப்புள்ளது. அப்படி மழையின் பாதிப்பு இல்லையென்றால், ஆட்டம் வழக்கம் போல நடைபெறும். அதாவது தடைப்பட்ட இடத்தில் இருந்து ஆட்டம் தொடங்கும்.

Trending News