2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிரது. இந்த ஆண்டு இறுதியில் 46 நாட்களுக்குள் நடைபெறும் மெகா நிகழ்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. மொத்தம் 10 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாபெரும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 08 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஒருநாள் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் இந்திய அணி எப்படி விளையாடும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது. இந்த பத்து மைதானங்களில் இந்திய அணியின் ODI சாதனைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
ICC ODI உலகக் கோப்பை 2023
2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அரங்கில் இந்திய அணியின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பல இருந்தாலும், ஒரு நாள் போட்டியில் நடத்தப்பட்ட சாதனைகளை மட்டுமே இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. இந்தப் போட்டிகளில், தாய்மண்ணில் உள்ள மைதானங்களில் வீரர்கள் மற்றும அணியின் சாதனைகளை பார்ப்போம்.
மேலும் படிக்க | ICC World Cup 2023: வெளியானது ஒருநாள் உலககோப்பை அட்டவணை! முழு போட்டிகள் விவரம்!
சென்னை
பல ஆண்டுகளாக, இந்த மைதானத்தில் விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில் 13ல் டீம் பங்கேற்றுள்ள இந்தியா, ஏழு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளை அடைந்துள்ளது.
பெங்களூரு
இந்த மைதானத்தில் இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்று கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் உள்ளது. ரோஹித் ஷர்மாவின் தரப்பு இந்த மைதானத்தில் தங்கள் ஆதிக்கத்தை தொடரும்.
டெல்லி
19882 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் 13 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2023 ஆம் ஆண்டு ICC ODI உலகக் கோப்பையில் இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது.
அகமதாபாத்
அகமதாபாத் மைதானத்தில் இந்தியா 10 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
புனே
புனேவின் புதிய மைதானத்தில், இந்தியா ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியது, அதில் நான்கு ஆட்டங்களில் வென்றது. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடுகிறது.
மேலும் படிக்க | 2023 Cricket World Cup: தலைமை பயிற்சியாளர் தோனி! பேட்டிங் பயிற்சியாளர் சச்சின்!
தர்மசாலா
ஒரு நாள் போட்டிகள், அறிமுகமானதிலிருந்து, தர்மசாலாவின் HPCA ஸ்டேடியம் 2 ODIகள் மற்றும் 8 T20 போட்டிகள் உட்பட மொத்தம் 10 போட்டிகளை நடத்தியது. இந்த ஆட்டங்களில் இந்திய அணி 1 வெற்றி மற்றும் 2 தோல்வியை பதிவு செய்துள்ளது.
லக்னோ
இந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு ஆட்டத்தில் விளையாடி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடுகிறது.
மும்பை
மும்பை வான்கடே மைதானத்தில், இந்தியா 19 ஒருநாள் போட்டிகளில் 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பெற்றுள்ளது. மரைன் டிரைவில் உள்ள கடலோர மைதானத்தின் இடம், ஸ்விங் பெளலர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
கொல்கத்தா
ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா அபார வெற்றி விகிதத்தில் உள்ளது. இந்த இடத்தில் இந்திய அணி, 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் 2023 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மாவின் அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுகிறது.
மேலும் படிக்க | மோதலுக்கு தயாராகும் இந்தியா-பாகிஸ்தான்! அக்டோபர் 15ம் தேதி காத்திருக்கும் ட்விஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ