ஐபிஎல் போட்டிக்கு திரும்பும் கிறிஸ் கெயில் - 2 அணிகளுக்கு ஆட விருப்பம்

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ள கிறிஸ் கெயில், 2 அணிகளுக்கு விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 7, 2022, 09:15 PM IST
  • ஐபிஎல் போட்டிக்கு திரும்ப கெயில் விருப்பம்
  • தான் மரியாதையாக நடத்தப்படவில்லை
  • ஐபிஎல் 2022-ல் பங்கேற்காதது குறித்து விளக்கம்
ஐபிஎல் போட்டிக்கு திரும்பும் கிறிஸ் கெயில் - 2 அணிகளுக்கு ஆட விருப்பம் title=

20 ஓவர் கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸாக இருக்கும் கிறிஸ் கெயில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கபோவதாக தெரிவித்துள்ளார். மிரர் நியூஸூக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்காதது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், ஐபிஎல் லீக்கில் தான் மரியாதையாக நடத்தப்படவில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஆண்டுக்கு ஆண்டு ஐபிஎல் வடிவம் மாறிக் கொண்டே செல்வதாக தெரிவித்த கெயில், இந்த ஆண்டு ஏலத்தில் தன்னுடைய பெயர் பதிவு செய்யாததற்கு மரியாதையே காரணம் எனக் கூறியுள்ளார்

மேலும் படிக்க | சச்சினுக்கு எதிராக டிராவிட் செய்த சதி - யுவராஜ் சிங் ஓபன் டாக்

ஐபிஎல் தொடரில் மூன்று அணிகளுக்காக விளையாடியிருந்தாலும், பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும் மரியாதை இல்லாதபோது காலத்துக்கு ஏற்ப மாறிக் கொள்வது அவசியம் என்பதை புரிந்து கொண்டதாக கூறியுள்ளார். அதனால் தான் இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை எனத் தெரிவித்த அவர், இன்னும் ஐபிஎல்லுக்கு தன்னுடைய தேவை இருப்பதாக கூறியுள்ளார். கொல்கத்தா மற்றும் பஞ்சாப், ஆர்பிசி அணிகளுக்காக விளையாடிருப்பதை தெரிவித்த அவர், அதில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் கோப்பையை வெல்லவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணியில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரில் களமிறங்குவேன் எனக் கூறியுள்ளார். அதற்காக தன்னை முழுமையாக தயார் நிலையில் வைத்துக் கொள்வேன் என்றும் கெயில் கூறியுள்ளார். கெயிலின் இந்த அறிவிப்பு தற்போது டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு கிறிஸ் கெயில் ரிட்டன்ஸ் என நெட்டிசன்கள் பையர் விடத் தொடங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அதிக சதங்கள் அடித்தவர், தனிநபர் அதிகபட்சம், அதிக சிக்சர் உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில். 

மேலும் படிக்க | பஞ்சாப்பை பந்தாடிய ராஜஸ்தான் - வெற்றிக்கு காரணம் இவர் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News