செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!

உலக சதுரங்க போட்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார் நார்வேயின் கார்ல்சன். இரண்டாம் இடத்தை பிடித்தார் இந்தியாவை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 24, 2023, 05:45 PM IST
  • செஸ் இறுதிப்போட்டியில் ரூ.91 லட்சம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்.
  • தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவியுள்ளார்.
  • பிரக்ஞானந்தாவுக்கு 80,000 அமெரிக்கா டாலர்கள்.
செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா! title=

நடப்பு ஃபிடே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்திய செஸ் ஜாம்பவான் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிச் சுற்றில் மோதினார். உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது. வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்வதற்காக இன்று டைபிரேக்கர் நடைபெற்றது.

இதில் டை பிரேக்கர் சுற்றின் முதல் ஆட்டத்தில் 14 நகர்வுகள் முடிவடைந்த நிலையில், இருவரும் தங்களின் பிஷப் (மந்திரி) காயினை இழந்தனர். 18வது நகர்வு முடிவில், பிரக்ஞானந்தா மற்றும் மேன்கஸ் கார்ல்சன் இருவருமே தங்களின் ராணிகளை இழந்தனர். முதல் சுற்று ஆட்டத்தில் சிறு தவறு செய்ததால் பிரக்ஞானந்தாவுக்கு சரிவு ஏற்பட்டு, கார்ல்சன் வெற்றி பெற்றார். 

மேலும் படிக்க | நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !

தற்போது முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வென்ற நிலையில், 2வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. டை பிரேக்கர் இரண்டாவது சுற்றில் கறுப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தாவும், வெள்ளை நிற காய்களுடன் மேக்னஸ் கார்ல்சனும் விளையாடினர்.

இதில் டை பிரேக்கரின் 2வது சுற்று ஆட்டத்திலும் மேக்னஸ் கார்ல்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி செஸ் உலகக்கோப்பைத் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாதனை படைத்தார். இறுதிவரை அவருக்கு நெருக்கடி கொடுத்து போராடி தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவியுள்ளார். இதனால் 18 வயது ஆன பிரக்ஞானந்தா இறுதிப் போட்டி வரை வந்து சாதித்திருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியின் ஆழ்த்தி இருக்கிறது.

 

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் விஎன்று 1,10,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 91 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு 80,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மூன்றாவது இடம் பெறும் வீரர் 60,000 யு.எஸ். டாலர் பெறுவார்.

மேலும் படிக்க | பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் காப்ரேஷனில் பணி நியமனம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News