விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் (Limited overs cricket) இந்தியா அதிக வெற்றியைப் பெறவில்லை. அவர் தலைமையில் இதுவரை இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. அவருக்கு பதிலாக ஒருநாள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. தற்போது அதை மெய்பிக்கும் விதமாக, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடருக்கு பின் விலகுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணியின் கேப்டனாக என் திறமைக்கு ஏற்ப பணியாற்றுள்ளேன். எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. அவர்கள் இல்லையெனில், நான் கேப்டனாக சாதித்திருக்க முடியாது. எனது அணி வீரர்கள், உதவி பணியாளர்கள், தேர்வுக்குழுவினர், பயிற்சியாளர்கள் மற்றும் இந்தியா வெற்றி பெற பிரார்த்தனை நடத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி.
கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக 3 ஃபார்மெட்ஸ்களிலும் விளையாடியுள்ளேன். அதேபோல கடந்த 5 முதல் 6 வருடங்களாக கேப்டனாக பல்வேறு நெருக்கடிகளிலும் அணிக்காக ஆடியுள்ளேன்.
இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கும் மட்டும் கேப்டனாக தொடர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளேன். அதேநேரத்தில் டி-20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், அங்கு ஒரு சாதாரண வீரராக களமிறங்குவேன்.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து சாதாரணமாக முடிவு எடுக்கவில்லை. நீண்ட ஆலோசனைக்கு பிறகு தான் எடுத்துள்ளேன். எனக்கு நெருக்கமானவர்கள், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் ரோகித் சர்மா உட்பட பலருடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோரிடம் பேசியுள்ளேன். நான் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டிற்காகவும், இந்திய அணிக்காகவும் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR