Asia Cup Final, IND vs SL: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், வங்கதேச அணியுடனான கடந்த போட்டியில் அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகியதால் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார், இன்று அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சிராஜ், பும்ரா, குல்தீப் யாத்வ் ஆகியோர் அணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் திட்டம் இதுதான்
இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், இந்த போட்டியில் அவருக்கு பதில் துஷன் ஹேமந்தா விளையாட உள்ளார். வேறு எந்த மாற்றத்தையும் இலங்கை செய்யவில்லை. மேலும், சூப்பர் 4 சுற்றில் சேஸ் செய்து இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார், இலங்கை கேப்டன் ஷனகா. தான் டாஸ் வென்றிருந்தாலும், பேட்டிங்கை தான் எடுத்திருப்போம் என ரோஹித் கூறியிருந்தார்.
Toss & Team News from Colombo
Sri Lanka have elected to bat against #TeamIndia in the #AsiaCup2023 Final.
Here's our Playing XI #INDvSL
Follow the match https://t.co/xrKl5d85dN pic.twitter.com/tzLDct6Ppb
— BCCI (@BCCI) September 17, 2023
மேலும் படிக்க | IND vs SL: இன்று நடைபெறும் இறுதி போட்டி! இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றங்கள்!
இந்திய பந்துவீச்சு படை
குறிப்பாக, இந்திய அணி சேஸிங்கில் சற்று தடுமாறி வருகிறது. கடந்த வங்கதேச போட்டியிலும் சேஸிங் செய்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைடந்தது. எனவே, இன்றைய இறுதிப்போட்டியில் இந்திய அணி முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஜடேஜா - குல்தீப் - வாஷிங்டன் என சுழற்பந்துவீச்சில் தற்போது அனைத்து வெரைட்டியையும் இந்தியா கொண்டு வந்துள்ளது. வேகப்பந்துவீச்சில் பும்ரா - சிராஜ் - ஹர்திக் என ஓப்பனிங் ஓவர்கள், டெத் ஓவர்கள், மிடில் ஓவர்களில் தாக்குதல் செய்யும் படையும் தயாராக உள்ளது.
துருப்புச்சீட்டு விராட் கோலி
பேட்டிங் ஆர்டரிலும் 8ஆவது வீரர் வரை பேட்டிங் உள்ளது. பெரிய போட்டிகளில் விராட் கோலி நெருக்கடி இல்லாமல் விளையாடுவார் என்பதாலும், போட்டி நடைபெறும் பிரேமதாச மைதானத்தில் அவர் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 சதத்தை பதிவு செய்துள்ளார் என்பதாலும் இன்றைய போட்டியில் அவர் துருப்புச்சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியில் திடீர் திருப்பம்
இந்தியா - இலங்கை இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமானது. போட்டி 3.45 மணிக்கு தொடங்கப்ட்டது. இலங்கை அணிக்கு குசால் பெரேரா - பதும் நிசங்கா ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே இலங்கைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெரேரா டக் அவுட்டானார். அடுத்து சிராஜ் வீசிய ஓவர் மெய்டனாக, பும்ரா வீசிய மூன்றாவது ஓவரில் 1 ரன் எடுக்கப்பட்டது.
இதையடுத்து, சிராஜ் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் நிசங்கா டக்-அவுட்டானார். அடுத்து மூன்றாவது, நான்காவது பந்தில் சதீரா சமரவிக்ரமா, அசலங்கா ஆகியோர் அடுத்தடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். தனஞ்செயா டி சில்வாவும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 5ஆவது மெய்டானாக 6ஆவது ஓவரில் கேப்டன் ஷனகா சிராஜ் வேகத்தில் போல்டாக, இலங்கையின் ஆறாவது விக்கெட்டும் சரிந்தது. அதன்படி, 6 ஓவர்கள் முடிவில் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் சரிந்துவிட்டன. சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மேலும் படிக்க | அக்சர் படேலுக்கு காயம்... உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழருக்கு வாய்ப்பா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ