India vs Australia, Sydney Test: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) அதன் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. 2014ஆம் ஆண்டுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றுமா அல்லது தொடர்ச்சியாக 5ஆவது முறையாக இந்தியா கோப்பையை தக்கவைக்குமா என்பது ஏறத்தாழ நாளை உறுதியாகிவிடும்.
ஆஸ்திரேலியாவில் கடந்த நவ. 22ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜன. 3) தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன.
181 ரன்களுக்கு ஆஸி., ஆல்அவுட்
ஆகாஷ் தீப் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணிக்குள் வந்தார். ரோஹித் சர்மா (Rohit Sharma) 5வது போட்டியில் இருந்து விலகிக்கொண்டதால், பும்ரா கேப்டன்ஸி பொறுப்பை பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷிற்கு பதில் பியூ வெப்ஸ்டர் அறிமுகமானார். டாஸ் வென்ற கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மேலும் படிக்க | IPL 2025: குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதிவியில் இருந்து சுப்மான் கில் நீக்கம்?
இந்திய அணி 185 ரன்களுக்கு நேற்றே ஆல்அவுட்டானது. தொடர்ந்து பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 2 ரன்களை எடுத்து நேற்றைய ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். நேற்று மட்டும் 11 விக்கெட்டுகள் சரிந்தன. இன்றும் ஆஸ்திரேலியாவுக்கு காலையில் விக்கெட்டுகள் சரிந்தன. இருப்பினும், பியூ வெப்ஸ்டர் 57, ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா 200 ரன்களை அடித்தாலே போதும்...
4 ரன்கள் முன்னிலையில் ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கத்துடன், ரிஷப் பண்ட்டின் மிரட்டல் அரைசதத்தின் உதவியும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா இன்று 141 ரன்களை குவித்தது, ஆனால் 6 விக்கெட்டுகளை இந்தியா இழந்துவிட்டது. 145 ரன்கள் முன்னிலையுடன் 4 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள இந்திய அணியில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தற்போது ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதுகு பிடிப்பு காரணமாக இன்று இரண்டாவது செஷனில் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) பந்துவீசாத நிலையில், ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றார். ஸ்கேன் முடிவின் அடிப்படையில்தான் அவர் நாளை வருவாரா மாட்டாரா என்பது தெரியவரும்.
இந்த சூழலில், இந்திய அணி (Team Inda) ஆஸ்திரேலிய அணிக்கு எவ்வளவு ரன்களை இலக்காக நிர்ணயித்தால் வெற்றி பெற முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெர்த் டெஸ்டில் 300 ரன்களுக்கு மேல் இந்தியா இலக்கை நிர்ணயித்ததால் வெற்றி எளிதாக கிடைத்தது. ஆனால், இம்முறை 300 ரன்கள் அடிப்பது கடினம். ஆடுகளத்தன்மை, வானிலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்திய அணி 200 ரன்களை எடுத்தாலே போதுமானது என கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி (Team Australia) இந்தியாவை 200 ரன்களுக்குள் சுருட்ட துடிக்கும்.
சிட்னி மைதானத்தில் வெற்றிகரமான இலக்கு
இதுவரை சிட்னி மைதானத்தில் 48 போட்டிகளில் 200+ டார்கெட் 6 முறை மட்டுமே வெற்றிகரமான அடிக்கப்பட்டுள்ளது. அதுவும் 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே ஒருமுறை மட்டுமே (Sydney Test Successful Target History) அடிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த 288 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய வெற்றிபெற்றதுதான், சிட்னியில் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய அடித்த ஒரே ஒரு வெற்றிகரமான 200+ டார்கெட். 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா இங்கு 8 போட்டிகளை வெற்றிகரமாக சேஸ் செய்து வென்றுள்ளது. அதில் 7 போட்டிகளும் 200 ரன்களுக்கும் குறைவானது ஆகும். எனவே, இந்திய அணி நாளை கூடுதலாக 50 ரன்களை எடுக்க துடிக்கும்.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தும் கழட்டிவிடப்படும் ரோஹித்! இவர் தான் கேப்டன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ