ஒரு வீரர் மைதானத்தில் விளையாடும் போது காயம் அடைந்தால், அது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். கடந்த 2014-ல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் இறந்ததிலிருந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்த "பிக் பாஷ் லீக்" கிரிக்கெட் தொடரில் ஒரு வீரருக்கு காயம் ஏற்ப்பட போது விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. "பிக் பாஷ் லீக்" கிரிக்கெட் தொடரில் நடந்த ஒரு ஆட்டத்தின் போது, ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங்கின் தலையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இது அங்கிருந்த அனைவருக்கும் பயத்தை ஏற்ப்படுத்தியது. ஆனால் காயம் ஏற்ப்பட்ட வீரர் பென் கட்டிங் சிரித்தப்படியே மைதானத்தை விட்டு வெளியேறினார். இது பார்ப்பவர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
எதிர் அணி அடித்த பந்தை கேட்ச் பிடிப்பதற்காக பென் கட்டிங் கைகளை நீட்டிய போது, பந்து அவரது கைகளில் வராமல், அவரது முகத்தில் பட்டு கீழே விழுந்தது. இதனால் முகத்தில் காயம் ஏற்ப்பட்டு முகத்தில் இருந்து இரத்தம் வெளியேறியது. ஆனால் மைதானத்தில் இருந்து பென் கட்டிங் சிரித்தப்படியே வெளியேறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
Ben Cutting decided to catch the high ball with his face... #Bigbash #BBL08 pic.twitter.com/pcKoGQbQHJ
— Global Cricketer (@GlobalCricketer) January 10, 2019