Tour of Australia: டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி 20, மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. அதற்கான வீரர்களின் பட்டியலை இன்று இந்தியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 26, 2020, 09:42 PM IST
  • மூன்று டி 20, மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கும்.
  • கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல், டி. நடராஜன் ஆகியோர் கூடுதலாக சேர்ப்பு.
  • ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் உடல் முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிக்கும்.
Tour of Australia: டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு title=

Tour of Australia: டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியின் பட்டியலை இன்று இந்தியா கிரிக்கெட் வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.

அகில இந்திய மூத்த தேர்வுக் குழு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி 20, மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்திய டி 20 அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமத் ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி

 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்: 

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமத் ஷமி, நவ்தீப் சைனி, சர்துல் தாக்கூர்

 

டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி: 

விராட் கோஹ்லி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பந்த் (விக்கெட்- கீப்பர்), ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமத் ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின் மற்றும் மொஹமத் சிராஜ்

 

கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல் மற்றும் டி. நடராஜன் ஆகிய நான்கு பேரும் கூடுதல் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியுடன் பயணம் செய்வார்கள்.

ALSO READ | கொரோனா வைரஸ் பயம்.. இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன

ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் உடல் முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிக்கும் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜே ஷா (Jay Shah) தெரிவித்தார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News