சிட்னி டெஸ்ட் டிரா! ஆஸ்திரேலியாவின் வெற்றி நம்பிக்கையை உடைத்த அஸ்வின் - விஹாரி கூட்டணி

ஆஸ்திரேலியாவின் 407 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி (Team India) ஐந்து விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ஐந்தாவது நாளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற எட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 11, 2021, 09:04 PM IST
  • ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவின் வெற்றி கனவை தகர்த்து போட்டனர்.
  • புஜாரா மற்றும் ரிஷப் பந்த் வெளியேறிய பிறகு ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை திரும்பியது
  • 1980 க்குப் பிறகு நான்காவது இன்னிங்ஸில் முதல்முறையாக, இந்தியா அதிக ஓவர்கள் விளையாடியுள்ளது.
  • நான்காவது டெஸ்ட் போட்டி (Australia vs India, 4th Test) பிரிஸ்பேனில் நடைபெறும்.
சிட்னி டெஸ்ட் டிரா! ஆஸ்திரேலியாவின் வெற்றி நம்பிக்கையை உடைத்த அஸ்வின் - விஹாரி கூட்டணி title=

Australia vs India 3rd Test: சிட்னி டெஸ்டின் (Sydney Test) கடைசி நாளில், ரிஷப் பந்த் (97), செதேஷ்வர் புஜாரா (77), ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் வெற்றி கனவை தகர்த்து போட்டியை டிரா செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் 407 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி (Team India) ஐந்து விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ஐந்தாவது நாளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற எட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டன.

இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில், இரண்டாவது ஓவரில் இந்திய அணிக்கு முதல் பின்னடைவு ஏற்பட்டது. ஆஸ்திரேலிய பவுலர் நாதன் லியோன் (Nathan Lyon), இந்திய கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை (4) அவுட் செய்தார். இந்தியாவைப் பொறுத்தவரை, ரஹானே (Ajinkya Rahane) ஒரு பெரிய நம்பிக்கையாக இருந்தார். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு முக்கிய விக்கெட்டாக இருந்தது. இந்திய அணியின் கேப்டன் அவுட் ஆனதும், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான நம்பிக்கை மேலும் பலமானது. 

ALSO READ | Test Jersey அணிந்து படத்தைப் பகிர்ந்தார் T.Natarajan: டெஸ்டில் ஆடுவாரா மாட்டாரா?

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும் போது, ​​காயமடைந்த ரிஷப் பந்த் (Rishabh Pant), கேப்டன் ரஹானேவுக்கு பிறகு களத்தில் இறங்கினார். இங்கிருந்து ஆஸ்திரேலியாவின் வெற்றி கனவு கட்டிடம் இடிந்து விழத்தொடங்கியது. ரிஷப் பந்த் ஒரு முனையில் அடித்து ஆடத் தொடங்கினார். புஜாரா மறுமுனையில் நிதானமாக நின்றார்.

இன்றைய முதல் அமர்வில் இந்த ஜோடியை உடைக்க முடியவில்லை. இருவரும் தொடர்ந்து தங்கள் சொந்த பாணியில் பேட்டிங் செய்தனர். முதல் அமர்வின் முடிவில், புஜாரா (Cheteshwar Pujara) ஆட்டமிழக்காமல் 41, பந்த் 73 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் ஸ்கோர் மூன்று விக்கெட்டுகளுக்கு 206 ரன்கள் இருந்தது. இரண்டாவது அமர்வில் டெஸ்டில் தனது ஆறாயிரம் ரன்களை பூஜாரா எடுத்தார் மற்றும் தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். மறுமுனையில் நின்று கொண்டிருந்த பந்த், சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆஸ்திரேலிய பவுலர் லயனின் பந்தில் ஒரு பெரிய ஷாட் அடிக்க விரும்பிய ரிஷப் பந்த், மட்டையை விளாசினார். ஆனால் பந்து தனது பேட்டின் மேல் விளிம்பில் பட்டு, பாட் கம்மின்ஸின் கைகளுக்கு சென்றது. மூன்று ரன்களால் ஒரு சதத்தை தவறவிட்டார். அவர் 118 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களை அடித்தார். இந்தியா அணி 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பந்தின் விக்கெட் சரிந்தது. புஜாரா மற்றும் பந்த் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 148 ரன்கள் கூட்டணியை உருவாக்கினர். சிறிது நேரம் கழித்து, புஜாராவும் அவுட் ஆனார். அவர் 205 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். 12 பவுண்டரிகளை அடித்தார்.

ALSO READ |  அனுஷ்கா ஷர்மா, விராட் கோலிக்கு பெண் குழந்தை பிறந்தது! வெளியான போட்டோ!

புஜாரா மற்றும் ரிஷப் பந்த் வெளியேறிய பிறகு ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை திரும்பியது. இரண்டாவது அமர்வின் முடிவில், இந்தியா ஐந்து விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் விஹாரி (Hanuma Vihari), அஸ்வின் இருவரும் போட்டியின் நிலைப்பாட்டை மாற்றினார். மேலும் இரு வீரர்களும் ஆட்டமிழக்காமல் மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்தனர்.

விஹாரி 161 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். 128 பந்துகளை எதிர்கொண்டு அஸ்வின் 39 ரன்களை அடித்தார். விஹாரி நான்கு பவுண்டரிகளும், அஸ்வின் (Ravichandran Ashwin) ஏழு பவுண்டரிகளும் அடித்தனர். இந்த இரு பேட்ஸ்மேன்களும் ஆறாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பகிர்ந்து கொண்டனர்.

நான்காவது இன்னிங்சில் இந்தியா மொத்தம் 131 ஓவர்கள் விளையாடியது. 1980 க்குப் பிறகு நான்காவது இன்னிங்ஸில் முதல்முறையாக, இந்தியா இவ்வளவு ஓவர்கள் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் லயன், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

ALSO READ |  AUS vs IND 3rd Test: இந்திய வீரர்கள் மீது மீண்டும் இனரீதியான துஷ்பிரயோகம்?

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்திய அணி 244 ரன்களுக்கு எடுத்தனர். 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி (Australia Team) இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்பில் 312 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இந்தியாவுக்கு 407 ரன்கள் என்ற வலுவான இலக்கை அளித்தன. இறுதியாக இந்தியா அணி ஆட்டத்தை டிரா செய்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்காக 131 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 81 ரன்களும் எடுத்த ஸ்டீவ் ஸ்மித், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டிக்கு பின்னர், நான்கு போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளனர். நான்காவது டெஸ்ட் போட்டி (Australia vs India, 4th Test) பிரிஸ்பேனில் நடைபெறும்.

ALSO READ |  IND vs Aus: நான்காவது டெஸ்ட் போட்டி நடப்பதில் சந்தேகம், Brisbane-ல் மீண்டும் லாக்டௌன்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News