சாய் சுதர்சனுக்கு அஸ்வின் பாராட்டு
தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இருக்கும் இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இப்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் இந்திய அணிக்கான தேர்வு குறித்து பேசியிருக்கும் மற்றொரு தமிழக வீரரான அஸ்வின், நான் மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு அடுத்தபடியாக சாய் சுதர்சன் தான் தமிழகத்தில் இருந்து அடுத்தாக இந்திய அணிக்கு நீண்ட நாட்கள் விளையாடப்போகும் தமிழ்நாட்டு கிரிக்கெட்டர் என பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க | தோனி கோபப்படக்கூடிய ஒரே விஷயம் இதுதான் - மேத்யூ ஹைடன்
இந்திய அணியில் நிச்சயம் இடம் உண்டு
சாய் சுதர்சன் குறித்து அஸ்வின் பேசும்போது, " தமிழ்நாட்டு அணிக்காக சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடியிருக்கிறார். தேசிய அணியில் விளையாடும்போது மாநில அணிக்காக விளையாடியதைவிட ஒருபடி மேலேபோய் அசத்த வேண்டும்.
அந்த திறமை சாய் சுதர்சனிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். சர்வதேச போட்டிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சாய் சுதர்சனிடம் நல்ல திறமை இருக்கிறது. அவருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம் இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு
தற்போது தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியில் இருக்கும் சாய்சுதர்சன், கெய்க்வாட்டுடன் துவக்க வீரராக களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை ரஜத் படிதார் துவக்க வீரராக விளையாடினாலும் சாய் சுதர்சன் 3வது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் டாப் 4 இடங்களில் இந்தியா ஒரு இடது கை பேட்ஸ்மேனை தேடிக் கொண்டிருக்கிறது என்பதை மறக்காதீர்கள். எனவே சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய திறமையைக் கொண்டுள்ள அவரால் கிடைக்கும் வாய்ப்பில் வெற்றிக்கு பங்களிக்க முடியும்" என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சாய் சுதர்சன் ஐபிஎல்
சாய் சுதர்சன் தமிழ்நாட்டில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தேர்வானார். சிறப்பாக விளையாடிய அவர் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 96 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட இந்த இன்னிங்ஸை வியந்து பாராட்டினார். அத்துடன் இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
மேலும் படிக்க | மும்பை ஸ்கெட்சில் சிக்காத முகமது ஷமி, குல்தீப், மிட்செல் மார்ஷ்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ