டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் உள்பட 162 ரன்கள் சேர்த்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 140 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் (869 புள்ளிகள்) 4-வது இடத்தில் இருந்து 2 இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஜோரூட் ஒரு இடம் சறுக்கி (848 புள்ளிகள்) 3-வது இடத்தை பெற்றுள்ளார். திலும் நீடிக்கின்றனர்.
பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 892 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடருகின்றனர்.
ஆல-ரவுண்டர்கள் தர வரிசையில், காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 259 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட வங்காளதேச அணியில் இடம் பிடித்து இருந்த ஆல்–ரவுண்டர் ஷகிப் அல்–ஹசன் (403 புள்ளிகள்) சொதப்பியதால் முதலிடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் (434 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (360 புள்ளிகள்) 3–வது இடத்தை பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டி அணிகள் தர வரிசையில் இந்திய அணி (121 புள்ளிகள்), ஆஸ்திரேலிய அணி (109 புள்ளிகள்) முறையே முதல் 2 இடத்தில் நீடிக்கின்றன.