ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்ட்டில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்து. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை 8 விக்கெட் இழப்பிற்கு 442 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 126(231) ரன்கள் எடுத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து, 215 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 138 ரன்னில் 10 விக்கெட்டையும் இழந்தது.
வெற்றி பெற 354 ரன்கள் தேவை என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், இங்கிலாந்து அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றது. இன்னும் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.
Sorry to England fans hoping to wake up to news of a famous #Ashes win... Australia have gone 2-0 up with a 120 run victory.
REPORT: https://t.co/S3hSSXzkY2 pic.twitter.com/btTjgQqis5
— ICC (@ICC) December 6, 2017