தோஹா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி, குரோஷியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஜூலியன் அல்வாரெஸின் பிரேஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் கோலினால் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது. கத்தாரின் லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபீபா உலகக் கோப்பை 2022 இன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அர்ஜெண்டினா.
ஃபிஃபா உலகக் கோப்பையில் லோதர் மத்தாஸின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸியின் சாதனை இது. இதற்கு முன்னதாக ஃபீபா உலகக்கோப்பைப் போட்டிகளில் 25வது முறை களம் இறங்கி சாதனைப் பதிவை லோதர் மத்தாஸ் மட்டுமே வைத்திருந்தார். இந்தப் போட்டியின் மூலம் லியோனல் மெஸ்ஸியும் லோதர் மத்தாஸின் சாதனைப் பதிவில் இணைந்துக் கொண்டார்.
களம் இறங்கிய அர்ஜெண்டினா அணியில், மிட்பீல்டர் லியான்ட்ரோ பரேடெஸ் மற்றும் டிஃபென்டர் நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ ஆகியோர் தொடக்க வரிசையில் இறக்கப்பட்டனர். ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் குரோஷியா ஆக்ரோஷமாக கார்னரைப் பெறத் தொடங்கியது. இடப்புறத்தில் கடினமான கோணத்தில் இருந்து டெஜான் லவ்ரன் ஹெட்டர் ஜோசிப் அருமையாக ஆடினார்.
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் குரோஷியாவின் டொமினிக் லிவகோவிச் பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றுக் கொண்டார். லிவாகோவிச் மற்றும் கோவாசிச் இருவருக்கும் மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது. ஆனால், 34வது நிமிடத்தில் மெஸ்ஸி அதை மாற்றி கோல் அடித்து அர்ஜென்டினாவை 1-0 என்ற முன்னிலை இடத்துக்குக் கொண்டு சென்றார்.
39வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் அர்ஜெண்டினா அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது, 69வது நிமிடத்தில், லியோனல் மெஸ்ஸியின் அற்புதமான உதவியுடன் அல்வாரெஸ், அணியை இறுதிப் போட்டிக்குக் கொண்டு செல்ல உதவும் வகையில் தனது இரண்டாவது கோலை அடித்தார்.
மேலும் படிக்க | FIFA World Cup 2022: கானல் நீரான ரொனால்டோவின் இறுதி உலகக்கோப்பைக் கனவு!
இதுவரை இரண்டு முறை ஃபீபா சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் அர்ஜெண்டினா அணி இந்த கோலுடன் 3-0 என முன்னிலை பெற்றது. ஆனால், 2018 சாம்பியனான குரோஷியாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
அர்ஜென்டினா 3-0 என்ற முன்னிலையுடன் 2022 இன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அர்ஜெண்டினாவின் இந்த வெற்றியின் மூலம், குரோஷியா இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இனி மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இரண்டாவது அரையிறுதியில் தோல்வியடையும் பிரான்ஸ் அல்லது மொராக்கோ அணியுடன் குரோசிய அணி மோதும்.
லியோனல் மெஸ்ஸியின் கனவு கைகூடுமா? அரையிறுதியில் சாதனை படைத்த மெஸ்ஸி, அடுத்த போட்டியில் கோப்பை வென்று ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுப்பாரா என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | Google Search in 2022: கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப்-10 விளையாட்டு நிகழ்வுகள் பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ