Afghan crisis: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் ஆப்கன் தேசியக் கொடி

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு 2020 தொடக்க விழாவில் ஆப்கானிஸ்தான் கொடி சேர்க்கப்படும் என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (International Paralympic Committee) தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் தெரிவித்தார். அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாவிட்டாலும், ஆப்கன் கொடி போட்டியில் சேர்க்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 24, 2021, 05:36 PM IST
Afghan crisis: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில்  ஆப்கன் தேசியக் கொடி   title=

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு 2020 தொடக்க விழாவில் ஆப்கானிஸ்தான் கொடி சேர்க்கப்படும் என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (International Paralympic Committee) தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் தெரிவித்தார். அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாவிட்டாலும், ஆப்கன் கொடி போட்டியில் சேர்க்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.  

டோக்கியோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஐபிசி தலைவர் இவ்வாறு தெரிவித்தார். தொடக்க விழாவில் ஆப்கானிஸ்தான் கொடியை இணைப்பது ஒற்றுமையின் செய்தியாக இருக்கும் என்று ஆண்ட்ரூ பார்சன்ஸ் கூறினார்.

டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற உள்ளது மற்றும் தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) நடைபெறும்.

Also Read | விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை லிட்டர் 4000 ரூபாய்!

ஆஃப்கானிஸ்தான் நாடு, தலிபான் கிளர்ச்சியாளர் குழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. அந்நாட்டில் தாலிபன்கள், ஆட்சி ஏற்பட்ட பிறகு, தங்கள் நாட்டில் நடக்கும் குழப்பம் காரணமாக ஆப்கான் விளையாட்டு வீரர்கள், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஜப்பானுக்கு செல்ல முடியவில்லை.

"ஒற்றுமையின் அடையாளமாக ஆப்கானிஸ்தான் கொடியை (தொடக்க) விழாவில் சேர்ப்போம் என்பதை தெரித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று ஆண்ட்ரூ பார்சன்ஸ் கூறியதாக ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.  

"இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவது முக்கியம் என்று நினைக்கிறேன், ஏனெனில் இது ஒரு சமாதானத்தின் அடிப்படையிலான அணுகுமுறை. ஆப்கன் வீரர்கள் இங்கு இருந்திருக்கவேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அது சாத்தியமாகவில்லை, ஆனால் அவர்களின் மனம் இங்கே நிச்சயமாக இருக்கும்" என்று பார்சன்ஸ் கூறினார்.

பாராலிம்பிக்கின் உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கில், "நேற்று பிற்பகல் ஒரு செய்தி மாநாட்டில், ஐபிசி ஒற்றுமையின் அடையாளமாக ஆப்கானிஸ்தான் கொடியை விழாவில் சேர்த்தது" என்று எழுதியது.

Also Read | மும்பை இந்தியன்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம்!

"சில ஊடகங்களில் ஐபிசி தலைவர் UNHCR ஒரு நாடு சார்ந்த கொடியை ஏந்திச் செல்வதாகக் கூறி தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இது அப்படியல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம், மேலும் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தன்னார்வலர்களாக இருப்பவர்களில் யாராவது ஒருவர், ஆப்கானிஸ்தானின் கொடியை ஏந்திச் செல்வார்."

முன்னதாக, ஆகஸ்ட் 16 அன்று ஐபிசி டேக்வாண்டோ தடகள வீரர் ஜாகியா குதாடாடி (Zakia Khudadadi) மற்றும் வட்டு எறியும் விளையாட்டில் பங்கேற்கவிருந்த ஹொசைன் ரசெளலி (Hossain Rasouli) ஜப்பானுக்குப் பயணம் செய்ய முடியாது என்பதை உறுதி செய்தது.

ஆப்கானிஸ்தான் பாராலிம்பிக் கமிட்டியின் லண்டனை தளமாகக் கொண்ட செஃப் டி மிஷன் ஆரியன் சாதிகி-யும் (Afghanistan Paralympic Committee's London-based Chef de Mission Arian Sadiqi) நிலைமையை எடைபோட்டு, அந்த அணி "சரியான நேரத்தில் காபூலில் இருந்து ஜப்பானுக்கு கிளம்ப முடியாது" என்று கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக ஆப்கானிஸ்தானில் தற்போதைய கிளர்ச்சி காரணமாக அந்த அணி சரியான நேரத்தில் காபூலில் இருந்து கிளம்ப முடியவில்லை" என்று சாதிக் ராய்ட்டர்ஸிடம் கூறினார்

Also Read | Ind vs Eng: மூன்றாவது டெஸ்டில் இந்த 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News