டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்க இருக்கும் 3 இந்திய வீரர்கள்!

T20 Worldcup 2022: ஐசிசி டி20 உலக கோப்பை 2022 போட்டிகள் இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2022, 09:43 AM IST
  • உலக கோப்பை போட்டிகள் இந்த மாதம் தொடங்குகிறது.
  • முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.
  • தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்க இருக்கும் 3 இந்திய வீரர்கள்! title=

தற்போது ​​இந்திய கிரிக்கெட் அணியில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் சில வீரர்கள் உள்ளனர். ஒரு சிலரை, இந்த வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இந்தியாவின் சமீபத்திய டி20 வீரர்கள் தேர்வை பார்த்தால், பிசிசிஐ ஏற்கனவே அடுத்த தலைமுறைக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளது புரியும்.  ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு மாறுதல் என்பது இந்திய அணி நிர்வாகத்திற்குப் பொதுவாக தலைவலியாக இருந்ததில்லை. சௌரவ் கங்குலியில் இருந்து, MS தோனி, விராட் கோலி வரை மாற்றம் எப்போதும் சீராகவும் திறமையாகவும் இருந்து வருகிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 போட்டிகள் இந்த மாதம் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி உள்ளது.  இந்நிலையில் சில இந்திய வீரர்கள் இந்த உலக கோப்பை 2022 போட்டிகள் முடிந்த பின்பு டி20 மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிக்க உள்ளனர்.

மேலும் படிக்க | விக்ரம் வேதா ஸ்டைலில் இஷானுக்கு வாழ்த்து கூறிய கில்! ஹ்ரித்திக் ரோஷனின் ரிப்ளை!

1. விராட் கோலி

விராட் கோலி டி20 போட்டிகளில் மகத்தான சாதனைகளை படைத்துள்ளார்.  முன்னாள் இந்திய கேப்டன் விராட்கோலி டி20 வடிவத்தில் 50+ சராசரியைக் கொண்டுள்ளார் மற்றும் 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ICC T20I உலகக் கோப்பையில் விருதுகளையும் வென்றுள்ளார். இருப்பினும், 33 வயதான அவர் சமீபத்தில் பார்மில் இருந்து விலகி மிகவும் சிரமப்பட்டார்.  இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகியது போலவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி தனது கடைசி டி20 சர்வதேச போட்டியை ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022ல் விளையாடலாம்.

2. முகமது ஷமி

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இதுவரை இந்த தலைமுறையின் சிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். டெத் ஓவர்களில் அவரது சிறப்பான பவுலிங் அணிக்கு பெரிதும் உதவுகிறது.  வரவிருக்கும் உலகக் கோப்பையில் ஷமி ஸ்டாண்ட்-பை வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
32 வயதான அவர் உலக கோப்பை முடிந்த பின்பு ஓய்வை அறிவிக்கலாம்.  ஷமி ஓய்வை அறிவிக்கும் பட்சத்தில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் மற்றும் அவேஷ் கான் போன்ற பல இளம் வீரர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் உள்ளன.

3. தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் 2022-ல் தனது திறமையை வெளிக்காட்டி தற்போது உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.  இந்திய அணியின் சீனியர் பிளேயர்களில் கார்த்திக்கும் ஒருவர்.  2007 உலக கோப்பை முதல் இந்திய அணிக்காக ஆடி வருகிறார்.  உலக கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் என்பதே எனது கனவு என்று கூறி இருந்தார்.  இந்த உலக கோப்பை 2022 முடிந்த பின்னர் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிக்க உள்ளார். 

மேலும் படிக்க | இஷான் கிஷானின் காதலிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News