நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது.
வெற்றி பெற 231 ரன்கள் தேவை என்ற கணக்கில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணி 46 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் ஷிகர் தவான்(68) மற்றும் தினேஷ் கார்த்திக்(64) இருவரும் அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.
இந்த வெற்றி மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.