சனிபெயர்ச்சி: மண வாழ்க்கை முதல் தொழில் வரை இந்த ராசிகளுக்கு கூடுதல் ஜாக்பாட்..!

சனி பகவான் மார்ச் 15 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். அவரின் இந்த பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கப்போகின்றன. அதனால் அந்த ராசிக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.     

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 13, 2023, 09:13 PM IST
சனிபெயர்ச்சி: மண வாழ்க்கை முதல் தொழில் வரை இந்த ராசிகளுக்கு கூடுதல் ஜாக்பாட்..! title=

கர்ம பலன்களை சரியாக கொடுக்கும் சனி பகவான், ஒவ்வொரு ராசிகளின் செயல்களுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை தருகிறார். சனி பகவான் ஒருவருக்கு தன்னுடைய ஆசிர்வாதத்தை பொழிய துவங்கி விட்டால் அதனை யாராலும், தடுக்கவே முடியாது. அந்தவகையில் சனி பெயர்ச்சிக்குப் பிறகு 3 ராசிகளுக்கு லட்சுமியின் அருளை நேரடியாக கிடைக்க செய்ய இருக்கிறார் சனி பகவான். 

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பிறகு தொழிலில்  லாபம் பெருகும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.சனி பகவானின் அருளும், லட்சுமியின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க இது சிறந்த நேரம். பணியிடத்தில் உங்கள் கௌரவமும் மதிப்பும் உயரும்.

மேலும் படிக்க | மீனத்தில் சூரியன்! வேலையில், தொழிலில் வெற்றிகளை குவிக்கும் ‘5’ ராசிகள்!

துலாம்

துலா ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் வெற்றி தேடி வரும். நீதிமன்றத்தின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில்வெற்றி கிடைக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டு கிடைக்கும். காதல் முயற்சிக்கு நல்ல பலன் உண்டு

சிம்மம்

சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிகாரர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் நிறைவேறும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி உறவு சாதகமாக இருக்கும். லட்சுமியின் அருளால் பண வரவுகள் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | சதயத்தில் சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இனி ராஜயோகம், மகிழ்ச்சி மழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News