செல்வத்துக்கு அதிபதி என்று அறியப்படும் அன்னை மகாலட்சுமியின் பிறந்தநாளான தந்தேராஸ் நாள் இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு மகாலட்சுமியின் பிறந்தநாள் நவம்பர் 10 தேதியன்று வருகிறது. ஒரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போலவே பிறப்பு, வளர்ச்சி, இறப்பு என அனைத்து மாற்றங்களும் இருந்தது. இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் நினைத்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் யோசனை கேட்டார்கள்.
பாற்கடலில் அமிர்தம்
தேவர்களுடன் சிவனும் பிரம்மாவும் வந்து மஹாவிஷ்ணுவிடம் முறையிட்ட போது, அவர் இருந்த திருபாற்கடலில் (Kshira Sagara) அமிர்தம் இருக்கின்றது என்றும், பாற்கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என்றும், அந்த அமிர்தத்தை அருந்தினால் நரை, திரை, பிறப்பு இறப்பு, ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும் என்றும் சொன்னார்.
பாற்கடலை கடைவது என்பது எப்படி என்று அனைவரும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். தேவர்கள் மட்டுமே கடைந்தால் அது இயலாதது என்றும், எனவே தேவர்கள் அசுரர்களின் உதவியை நாட வேண்டும் என ஸ்ரீமஹாவிஷ்ணு ஆலோசனை தெரிவித்தார்.
அவரது யோசனைப்படியே திருபாற்கடலை கடையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமிர்தத்தை எடுக்க மேருகிரி எனப்படும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் வைத்து தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். மஹா விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மந்தர மலையை தாங்கினார்.
பாற்கடலை கடைந்தபோது அவதரித்த மஹாலஷ்மி
பலமான முயற்சிக்கு பிறகு முதலில் விஷம் வெளிவந்தது, அந்த ஆலகால விஷத்தை சிவ பெருமான் அருந்தி, அதை தன் கழுத்தில் நிறுத்தி நீலகண்டன் என்ற பெயரையும் பெற்றார். அதன் பிறகு, பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிவருவதற்கு முன், அன்னை மகாலட்சுமி தோன்றினார். அவருடன் சிந்தாமணி, சூடாமணி, கௌஸ்துவ மணி, மூதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம், துளசி ஆகியவை தோன்றின.
திருபாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து வெளிவந்த ஸ்ரீதேவியான மஹா லஷ்மியை ஸ்ரீமஹாவிஷ்ணு திருமணம் புரிந்தார். தந்தேராஸ் தினமான அன்னையை வழிபட்டால், அன்னை மகாலட்சுமியும் அவரை மார்பில் ஏந்தியிருக்கும் விஷ்ணுவும் அனைவருக்கும் அருள் புரிவார்வார்கள்.
திரயோதசி தினம்
தீபத் திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளிக்கு முதல் நாள் செல்வங்களை அள்ளித் தரும் அன்னை மகாலட்சுமி பிறந்த நாள், தந்தேராஸ் தினமாக கொண்டாடப்படுகின்றது. வட மாநிலங்களில் மக்கள் அன்னை லட்சுமியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
அன்னை லட்சுமி, தன்வந்திரி பகவான் மற்றும் குபேரரின் அருள் வேண்டி இந்த நாளில் பூஜைகளை செய்கிறார்கள். இந்த ஆண்டு நவம்பர் 10, வெள்ளிக்கிழமை தந்தேரஸ் கொண்டாடப்படுகிறது.
தந்தேராஸ்
தீபாவளிக்கு முன்னர் வரும் தந்தேரஸ் சுபநாளில், அன்னை லட்சுமிக்கும் தன்வந்திரிக்கும் பூஜை செய்யப்படுகிறது. ஐப்பசி மாதத்தின் தேய்பிறையில் வரும் திரயோதசி தினம் தான் அன்னை மகாலட்சுமி அவதரித்த நாள். இந்த நாளில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் மற்றும் நகைகளை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பல விதமான பொருட்களை வாங்குகிறார்கள்.
திருபாற்கடலைக் கடைந்தபோது, தன்வந்திரி பகவான் தோன்றியபோது, அவர் கைகளில் அமிர்தம் நிறைந்த ஒரு பித்தளை கலசம் இருந்தது. தன்வந்திரி பகவானுக்கு பித்தளை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே தந்தேராஸ் நாளன்று பித்தளை பொருட்களை வாங்குவது நல்லது.
மேலும் படிக்க | Mercury Rise: விருச்சிகத்தில் உச்சமடையும் புதன்! கொட்டோ கொட்டுன்னு பணமழை கொட்டும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ