ஜூன் 10-16 வார ராசிபலன்! கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்! ஜோதிட எச்சரிக்கை!

Weekly horoscope 10 - 16: திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2024, 10:33 PM IST
  • ஜூன் 10 முதல் 16 வரையிலான வாரம்
  • ஒரு வார ராசிபலன்!
  • ஆனி மாதம் எப்படி இருக்கும்?
ஜூன் 10-16 வார ராசிபலன்! கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்! ஜோதிட எச்சரிக்கை! title=

ஜூன் பத்தாம் தேதியன்று துவங்கும் எதிர்வரும் ஒரு வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்...

மேஷம் 
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.  

ரிஷபம் 
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நரசிம்மர் வழிபாடு  குழப்பம் நீங்கி தெளிவைக் கொடுக்கும்.  

மிதுனம் 
செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். 

கடகம் 
பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மேல் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வியாபார முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும்.  

மேலும் படிக்க | சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!

சிம்மம் 
எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில செலவுகளால் மனசஞ்சலம் ஏற்படும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  

கன்னி
உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கன்னி ராசியினர் திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். 

துலாம் 
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  

விருச்சிகம்
மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அரசு காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும்.  

மேலும் படிக்க | அங்காரகரின் அன்பான பார்வையினால் அதிர்ஷ்டத்தால் தூள் கிளப்பப்போகும் ராசிகள்!

தனுசு 
துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு விஷயங்களில் காரிய அனுகூலம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும்.

மகரம் 
எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். எதிர்பாராத சில திடீர் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும்.  

கும்பம் 
வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். துரிதமின்றி விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  

மீனம்
பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏழரையை விட அதிகமாய் பயமுறுத்தும் அஷ்டமச் சனி! சனிக்கிழமையன்று சனீஸ்வர வழிபாடு நலம் தரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News