சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு மித மிஞ்சிய பணம், புகழ் வந்து சேரும்

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் நவராத்திரி காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறலாம். சுக்கிரன் யாரிடம் கருணை காட்டுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 27, 2022, 12:41 PM IST
  • நவராத்திரியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் 2022
  • இந்த ராசிக்காரர்களுக்கு நவராத்திரி சிறப்பிக்கும்
  • வியாபாரிகளுக்கு பண மழை பொழியும்
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு மித மிஞ்சிய பணம், புகழ் வந்து சேரும் title=

நவராத்திரியில் சுக்கிரன் பெயர்ச்சி 2022: நேற்று முதல் நவராத்திரி தொடங்கியது. இந்து மதத்தில் நவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இம்முறை நவராத்திரி 9 நாட்கள் வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதி கன்னி ராசியில் சஞ்சரித்த சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறார். நவராத்திரியின் இந்த 9 நாட்களில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பண வரவு கிடைக்கப் போகிறது. கன்னி ராசியில் ஆதாவது புதனின் ராசியில் சுக்கிரன் கிரகம் நுழைந்துள்ளது. அதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு சுப, அசுப பலன் இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் மட்டும் தங்களின் வியாபாரத்தில் அனுகூலமானவர்களாக காணப்படுவார்கள். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷம் - ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், எதிரிகளிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவும், இல்லையெனில் அவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள், பொறுமையின் பலன் இனிமையாக இருக்கும். 

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பின் மகர ராசியில் சனி; அமோக பலனைப் பெறும் ‘3’ ராசிகள்! 

ரிஷபம் - சுக்கிரன் சஞ்சாரத்துடன் கூடிய நவராத்திரியின் இந்த 9 நாட்களும் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் விசேஷமாக இருக்கும். இந்த சொந்தக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் இந்த நபர்கள் பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. பணம் வசூலிப்பதில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் தொடர்பான சில பிரச்சனைகள் விரைவில் தீரும். 

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். பொருளாதார வளர்ச்சியால் பணம் லாபகரமாக காணப்படும். ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக ஏதேனும் நோயால் அவதிப்பட்டு வந்தால், விரைவில் அதிலிருந்து விடுபடப் போகிறீர்கள். வீட்டிலும் அமைதியான சூழல் நிலவும்.

கடகம் - கடக ராசிக்காரர்கள் சமூக கௌரவத்துடன் செல்வத்தையும் பெற வாய்ப்புள்ளது. பல வழிகளில் பணம் சம்பாதிக்கலாம். இந்த நேரம் தொழிலுக்கு சாதகமாக உள்ளது. பழைய கடன் நிலுவையில் இருந்தால், இந்த காலகட்டத்தில் திருப்பிச் செலுத்துவிடுவீர்கள். மத வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். 

சிம்மம் - ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ராசிக்காரர்களுக்கு பல்வேறு ஆதாரங்களில் இருந்து பண பலன்கள் காணப்படும். இந்த நேரத்தில் நீங்கள் அனைத்து துறையிலும் வெற்றி பெறலாம். இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். எந்த ஒரு செயலை கையில் எடுத்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | அக்டோபர் 18 வரை இந்த '6' ராசிகளின் தலைவிதி சூரியனைப் போல் பிரகாசிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News