சுக்கிரன் மாற்றத்தால் உருவான திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்

Venus Transit: புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகம் ஆகிய மகா யோகங்களால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கப்போகின்றன என இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 24, 2022, 08:14 PM IST
  • புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகத்தின் பலன் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.
  • கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவீர்கள்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
சுக்கிரன் மாற்றத்தால் உருவான திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள் title=

சுக்கிரன் ராசி மாற்றம், புத ஆதித்ய யோகம், திரிகிரஹி யோகம்: பஞ்சாங்கத்தின்படி இன்று செப்டம்பர் 24 ஆம் தேதி கன்னி ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் இணைந்து திரிகிரஹி யோகத்தை உருவாக்கியுள்ளனர். அதே நேரத்தில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புத்தாதித்ய யோகமும் உருவாகியுள்ளது. இந்த வழியில், கன்னியில் புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகத்தின் ஒரு மகத்தான சேர்க்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சில ராசிகளின் அதிர்ஷ்டம் பன்மடங்காக அதிகரிக்கும். 

கன்னி ராசியில் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதியும் சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதியும் நுழைந்தனர். மறுபுறம், இன்று செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 9:03 மணிக்கு சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசித்துள்ளார். அக்டோபர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியை விட்டு வெளியேறுவார். அப்போது, புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகம் ஆகிய மஹா சிறப்பு வாய்ந்த சேர்க்கைகளும் நிறைவடையும். இந்த இரண்டு யோகங்களும் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. 

புதாதித்ய யோகத்தில், செல்வம், பெருமை, கௌரவம், மரியாதை கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தின் பலன் காரணமாக வாழ்வில் பொருள் இன்பம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகம் ஆகிய மகா யோகங்களால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கப்போகின்றன என இந்த பதிவில் காணலாம். 

சிம்மம்: 

புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகத்தின் பலன் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

மேலும் படிக்க | 3 ராசிகளுக்கு இப்போது ஏழரை சனி, எச்சரிக்கை காலம்: இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்

கடகம்: 

புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகம் ஆகிய பெரிய யோகங்களால் இந்த நேரம் கடக ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி பொருளாதார நிலை வலுப்பெறும். இந்த நேரத்தில் நீங்கள் பதவி உயர்வு பெறலாம்.

விருச்சிகம்: 

புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகத்தின் தாக்கத்தால், விருச்சிக ராசிக்காரர்களின்  வருமானத்தில் அபரிமிதமான உயர்வு இருக்கும். சூரியன்-புதன் கிரகங்களின் தாக்கத்தால் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். வருமானத்துக்கான புதிய வழிகள் பிறக்கும். 

தனுசு: 

இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்க: பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கன்னி ராசியில் நுழையும் சுக்ரன்; அமோக வாழ்வைப் பெறும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News