Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு நல்லது, யாருக்கு ஆபத்து? முழு ராசிபலன்

Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். ராசிகளில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 6, 2022, 11:40 AM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு கௌரவம், மரியாதை, புகழ் அதிகரிக்கும்.
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி துறையில் படிப்பவர்களுக்கு இது சாதகமாக இருக்கும்.
  • புதிய வருமானங்கள் உருவாகும்.
Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு நல்லது, யாருக்கு ஆபத்து? முழு ராசிபலன் title=

சுக்கிரன் ராசி மாற்றம்: ஆகஸ்ட் 7, 2022 அன்று காலை 5:21 மணிக்கு சுக்கிரன் கிரகம் தனது நட்பு கிரகத்தின் வீடான மிதுன ராசியில் இருந்து வெளியேறி சந்திரனின் ராசியான கடகத்தில் நுழைவார்.  சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் இடையிலான உறவு அவ்வளவு நல்லதாக கருதப்படுவதில்லை. இருப்பினும், சில நேரங்களில் உடனடி சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தால், மனிதர்களுக்கு அதன் மூலம் நல்ல பலன்களும் கிடைக்கும். ஆகஸ்ட் 31 வரை சுக்கிரன் இந்த நிலையில் இருப்பார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். ராசிகளில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

ஆடம்பர பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். நிலம், வீடு வாங்கி விற்கும் தொழில்கள், வாகன விற்பனை, விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் அதிக போராட்டம் இருக்கும். வருமானம் மற்றும் பண விஷயங்களில் தடைகள் இருக்கலாம். மனதில் டென்ஷன் இருக்கும். வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்படும். வெளிநாடு செல்வது அல்லது நீண்ட தூர பயணம் தள்ளிப் போகலாம். ஆகஸ்ட் 20 முதல், பொருளாதார நிலை வலுவாக இருக்கும், உங்களுக்கு வேலையும் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு கௌரவம், மரியாதை, புகழ் அதிகரிக்கும், வேலையில் வெற்றி, புதிய வேலை ஆகியவை கைகூடும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் முழு மகிழ்ச்சியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆகஸ்ட் 10 முதல் 20 வரை வருமான வழிகள் தடைபடும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். கலைத்துறையில் தொடர்புடையவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்:

உத்தியோகத்தில் பதவி உயர்வு, வியாபாரம், திருமணம், வேலை மற்றும் மூதாதையர் சொத்து வருவதில் தடை ஏற்படும். ஆகஸ்ட் 20க்குப் பிறகு, உங்களுக்கு மரியாதை, புகழ், மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் வளங்கள் பெருகும். புதிய நிலம் வாங்கும் யோகம் உள்ளது. பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

மேலும் படிக்க | Mars Transit 2022: 'பெரிய மாற்றம்', 4 ராசிகளுக்கு ராஜ யோகம் 

கடகம்:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி துறையில் படிப்பவர்களுக்கு இது சாதகமாக இருக்கும். புதிய வருமானங்கள் உருவாகும், மரியாதை, பதவி, கௌரவம் கூடும். இடையில் அதிர்ஷ்டம் துணையாக இல்லை என்பது போல் தோன்றும். சக பெண் ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். திருமண வாழ்க்கையிலும் கசப்பு ஏற்படலாம். ஆகஸ்ட் 20க்கு பிறகு சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்:

திடீர் செலவுகள் அதிகரிக்கும். வேலைகள் குறித்த நேரத்தில் நிறைவேறாது. சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் தகராறு செய்யாதீர்கள். இல்லையெனில் வேலை போய்விடும். வியாபாரம் சற்று சுமாராக இருக்கும். ஆகஸ்ட் 20க்கு பிறகு சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு லாபம் உண்டாகும்.

கன்னி:

இறக்குமதி - ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் லாபம் அடைவார்கள். திருமண வாழ்க்கையில் தகராறு ஏற்படும். யாருக்காகவும் சாட்சியம் கூறுவதைத் தவிர்க்கவும். சட்டப் பணிகளில் விழிப்புடன் இருக்கவும். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்:

வேலை, வருமானம் தடைபடலாம். உடல்நலம் பாதிக்கப்படும். கடன் பெறுவதில் தடைகள், குடும்பத்தில் டென்ஷன், ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் தடைகள் ஏற்படலாம். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மெதுவாக அதிகரிக்கும். ஆனால் எந்த எதிர்மறை விளைவும் ஏற்படாது என்பதால் கவலைப்பட வேண்டாம். தந்தையின் ஒத்துழைப்பு இருக்கும். பொருளாதார நிலை பலவீனமாக இருக்கும். ஆகஸ்ட் 9 முதல் ஐந்து நாட்களுக்கு தடைகள் ஏற்படும். மைத்துனருடன் விரிசல் ஏற்படலாம். ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தப்பட்ட பணிகள் விரைவில் முடிவடையும்.

தனுசு:

உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரும். வருமானத்தில் தடை ஏற்படும். தொழிலதிபர்களுக்கு தங்கள் பங்குதாரருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஆகஸ்ட் 17-க்குப் பிறகு தொழிலில் வளர்ச்சியும், வேலையில் முன்னேற்றமும் ஏற்படும்.

மகரம்:

திருமண வாழ்க்கையில் துணையின் ஆரோக்கியம் கெடலாம். எனினும் சில நாட்களில் சரியாகும். மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் காணலாம். ஆகஸ்ட் 20க்கு பிறகு மாணவர்களின் படிப்பில் நல்ல செயல்திறன் இருக்கும். பணம் வருவதில் தடைகள் இருந்தாலும் தாமதமாக பணம் கிடைக்கும். புலனாய்வுத் துறை அல்லது ஆராய்ச்சிப் பணிகளில் தொடர்புடையவர்கள் ஆதாயம் அடைவார்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களின் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கலை, சினிமா அல்லது நடிப்புத் துறையுடன் தொடர்புடையவர்கள் வெற்றி பெறுவார்கள். வேலைகளில் தடைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளன. பெண்கள் மதிக்கப்பட வேண்டும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்னும் 114 நாட்களில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News