விரைவில் சனி தசை; சனிபகவானின் பிடியில் இந்த 2 ராசியினர் சிக்குவார்கள்

Shani Gochar in Capricorn 2022:  ஜூன் 5 முதல் சனி வக்ர பெயர்ச்சியானார். இதற்கிடையில் விரைவில் மீண்டும் சனியின் ஸ்தானத்தில் மாற்றம் ஏற்பட்டு இந்த 2 ராசிகளிலும் சனி தசை தொடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2022, 01:19 PM IST
  • ஜூலை 12ம் தேதி சனி தனது ராசியை மாற்றி மகர ராசிக்குள் பெயர்ச்சி
  • சனி தசை நடக்கும் போது ஏற்படும் தீமைகள் என்ன
  • சனி தசை இந்த ராசிகளில் தொடங்கும்
விரைவில் சனி தசை; சனிபகவானின் பிடியில் இந்த 2 ராசியினர் சிக்குவார்கள் title=

சனியின் நிலையில் ஒரு சிறிய மாற்றம் கூட பெரிய மாற்றத்தை கொண்டு வரும். சமீபகாலமாக சனி வக்ர பெயர்ச்சியாக பயணிக்க ஆரம்பித்து தற்போது ஜூலை 12ம் தேதி சனிபகவான் ராசியை மாற்ற உள்ளார். சனி தற்போது கும்ப ராசியில் இருப்பதால் ராசியை மாற்றி மகர ராசிக்கு பிரவேசிப்பார். இத்துடன் சனி தசை 2 ராசிகளில் முடிந்து தற்போது 2 ராசிகளில் தொடங்கும்.

சனி தசை இந்த ராசிகளில் தொடங்கும்
சனி பகவான் மகர ராசியில் நுழைந்தவுடன் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை தோஷம் ஏற்படும். மறுபுறம், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசை முடிவடையும். தற்சமயம் சனி கும்ப ராசியில் இருப்பதால் கடகம், விருச்சிக ராசிக்காரர்கள் சனி தசையின் பிடியில் உள்ளனர். ஜூலை 12ம் தேதி சனி தனது ராசியை மாற்றி மகர ராசிக்குள் பெயர்ச்சியாகி ஜனவரி 17ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். இதன் போது மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை தோஷம் ஏற்படும். ஆனால், ஜனவரி 17ம் தேதி சனி மீண்டும் ராசி மாறியவுடன் கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனி தசையின் பிடியில் சிக்குவார். அத்துடன் சனி தசை இந்த இரண்டு ராசிகளிலும் மார்ச் 29, 2025 வரை இருப்பார்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி 2022: மேஷத்தில் பெயர்ச்சி; யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் 

இதற்கிடையில் 2022 ஆம் ஆண்டு சனியின் அடிப்படையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ஜோதிடர்கள் கூறி வருகின்றது. இந்த ஆண்டு சனியின் நிலையில் பல மாற்றங்கள் நிகழும். இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றிய இந்த கிரகம், இந்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி தனது ராசியை மாற்றியது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதற்குப் பிறகு, ஜூன் 5 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி ஆனார். தற்போது ஜூலை 12ம் தேதி மீண்டும் கும்ப ராசியை விட்டு மகர ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.

சனி தசை நடக்கும் போது ஏற்படும் தீமைகள் என்ன
சனி தசை வரும் போது அந்த ஜாதகர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.

சனி தசை நடக்கும் போது உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் ஆடை வரை எளிமையை கடைப்பிடிக்க வேண்டும். பட்டாடைகள் உடுத்தினால் அதனை நீக்கும் விதமாக உடலில் சில உபாதைகளை சனி ஏற்படுத்துவார். இதன் காரணமாக பருத்தி உடைக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மேலும், சனி தசையின் போது வாயுத்தொல்லைகள் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News