Sun transit: பொங்கலை பொங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாட சூரியப் பெயர்ச்சி பரிகாரங்கள்

Sun Transit Remedes 2022:  மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனுக்கு பிடித்தமான மார்கழி மாதத்தில் நிம்மதியாய் இருக்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 7, 2022, 02:27 PM IST
  • சூரியப் பெயர்ச்சி பரிகாரங்கள்
  • டிசம்பர் 16ம் தேதி சூரியப் பெயர்ச்சி நடைபெறுகிறது
  • மார்கழி மாதத்தில் தனுசு ராசிக்குப் பெயர்கிறார் சூரியன்
Sun transit: பொங்கலை பொங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாட சூரியப் பெயர்ச்சி பரிகாரங்கள் title=

புதுடெல்லி: கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடம், நமது வாழ்க்கையை திட்டமிட்டு நடத்த உதவுகிறது. டிசம்பர் மாதம் 16ம் தேதி  சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் மாதத்தில் வேறு சில கிரகங்களும் பெயர்ச்சியடைவதால், இந்த 16ம் தேதி முதல் தைப் பொங்கல் வரை சூரியனின் சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பது தெரியாது. இந்தப் பரிகாரங்களை செய்தால், மார்கழி மாதம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனுக்கு பிடித்தமான மார்கழி மாதத்தில் நிம்மதியாய் இருக்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.

இந்தப் பரிகாரங்கள், எளிமையானவை என்றாலும், நல்ல பலன் கொடுப்பவை. 

மேஷ ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: ராம் ரக்ஷா ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.

 ரிஷப ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: தினமும் காலையில் செம்புப் பாத்திரத்தில் சூரிய பகவானுக்கு நீர் சமர்பிக்கவும்.

மிதுன ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: சூரியப் பெயர்ச்சி பரிகாரங்களில் ஒன்று, தினமும் காலையில் சூரிய தேவனுக்கு சூரிய நமஸ்காரம் செய்வதும் தியானிப்பதும் என்பது உங்களுக்கு பொருந்தும் பரிகாரமாக இருக்கும்.

சிம்ம ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்

மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!

கன்னி ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: பிறருக்கு தானம் செய்யுங்கள், கோதுமை, வெல்லம் போன்ற உணவுப் பொருட்களை தானம் செய்யுங்கள்.

துலாம் ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: அதிகப்படியான உப்பு மற்றும் அரிசியை எந்த வடிவத்திலும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் துலாம் ராசிக்காரரே!

விருச்சிக ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: தினமும் காலையில் நீராடி உடன் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்

மகர ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: சூரியனின் தீய விளைவுகளை குறைக்க காலணிகளை தானம் செய்யவும்.

கும்ப ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: தந்தைக்கு சேவை செய்யவும், அவருடன் மரியாதைக்குரிய உறவைப் பேணுவதும் நல்லது. இது கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சிக்கான சிறந்த பரிகாரமாக செயல்படும்.

மீன ராசிக்கு சூரிய பெயர்ச்சி பரிகாரம்: அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதையும், அரசை ஏமாற்றுவதையும் தவிர்க்கவும். ஜாதகத்தில் சூரியனை பலவீனமாக இருப்பதால் அது கெடுதல் செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News