சூரியனால் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Sun Transit Time & Date: சூரிய பகவான் புதன், மிதுன ராசியில் வந்துள்ளார். சூரியனுக்கும் புதனுக்கும் நட்பு உண்டு. அதனால் சூரிய பகவான் இங்கே பவர்ஃபுல்லாக இருப்பார். இது தவிர சூரிய பகவான் தனது ராசியான சிம்ம ராசியில் இருந்து 11வது வீட்டிற்குள் நுழைவார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 20, 2023, 10:10 AM IST
  • மிதுன ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
  • அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவே சிறந்த நேரம்.
  • சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவானது.
சூரியனால் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் title=

ஜோதிட சாஸ்த்திரத்தில், சூரியன் ஆன்மா, தந்தை, மரியாதை மற்றும் அரசாங்க வேலை ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. இவர்களது ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் நாடு மற்றும் உலகம் முழுவதும் விழுகிறது. இப்போது சூரிய பகவான் புதனின் ராசியான, மிதுனத்தில் வந்துள்ளார். சூரியனுக்கும் புதனுக்கும் நட்பு உண்டு. அதனால சூரியன் பகவான் இங்கே பவர்ஃபுல்லாக இருப்பார். இது தவிர சூரிய பகவான் தனது ராசியான சிம்ம ராசியில் இருந்து 11வது வீட்டிற்குள் நுழைவார். இது வருமான விகிதம் எனப்படும். இது மட்டுமின்றி, ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை புதனுக்கும் சூரியனுக்கும் இடையே ஒரு சேர்க்கையும் இருக்கும்.

இதன் மூலம் மூன்று ராசிக்காரர்களுக்கு மரியாதை, கௌரவம், தற்செயலான பணம் போன்றவை கிடைக்கும். அந்த மூன்று அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சக்தி வாய்ந்த ராஜயோகம்
2023 ஜூன் மாதம் 2 முறை ஒரு அற்புதமான மற்றும் சக்தி வாய்ந்த ராஜயோகம் சூரியன் மற்றும் புதனால் உருவானது. அதில் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் அதுவும் ஜூன் 07 ஆம் தேதி ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவானது.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்!

அதன் பின் சூரியன் மிதுன ராசிக்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து புதன் ஜூன் 24 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால் மீண்டும் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் மிதுன ராசியில் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகமானது ஜூலை 17 வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும், கௌரவமும் அதிகரிக்கும்.

மிதுனம்
சூரியன் மற்றும் புதனின் சக்திவாய்ந்த ராஜயோகம் மிதுன ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தில் மூன்றாவது வீட்டின் அதிபதி சூரிய பகவான் ஆவார். அதனால், உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். நம்பிக்கையும் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து லாபம் வரலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் பிரபலமாக இருப்பது மட்டுமல்லாமல், மரியாதையையும் பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் - சூரியனின் சக்தி வாய்ந்த ராஜயோகமும் பலன்களைத் தரும். உங்கள் வருமான வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். சுப காரியங்கள், வெளிநாடுகள் மற்றும் உடன்பிறந்தவர்களின் சுப காரியங்களுக்கு அதிபதியாக சூரிய பகவான் இருப்பதால், உங்கள் உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து வருமானம் வரலாம். அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவே சிறந்த நேரம். பெரிய பதவியை அடைய முடியும்.

தனுசு
சூரிய பகவானின் சக்தி வாய்ந்த ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்தது. இந்த ராசியில் அதிர்ஷ்ட ஸ்தானத்தின் அதிபதி சூரியபகவான் ஆவார். தனுசு ராசியின் மீது ஏழாம் பார்வையை வைப்பார். இந்த காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டுப் பணிகளில் வெற்றி உண்டாகும். மரியாதையும் கூடும். நிறுத்தப்பட்ட பணிகள் முடியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிம்மத்தில் செவ்வாய் சஞ்சாரத்தின் தீய பலன்கள் யாருக்கு? ‘அந்த’ 4 ராசியில் உங்கள் ராசியும் உள்ளதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News