ஆகஸ்ட் 10ம் தேதி ராகு செவ்வாய் சேர்க்கை, இந்த ராசிக்காரர்களுக்கு ஜாலி

ஜோதிடத்தில் செவ்வாய் மற்றும் ராகு கிரகங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. உங்கள் வாழ்க்கையில் செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கையின் தாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்-

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2022, 10:05 AM IST
  • ஆகஸ்ட் 10ம் தேதி ராகு செவ்வாய் சேர்க்கை
  • செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கையின் தாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்
ஆகஸ்ட் 10ம் தேதி ராகு செவ்வாய் சேர்க்கை, இந்த ராசிக்காரர்களுக்கு ஜாலி title=

மேஷ ராசியில் ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கை ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரை இருக்கும். ராகு, செவ்வாய் சேர்க்கையால் இதை அங்காரக யோகம் உண்டாகும். ஜோதிடத்தில் அங்காரக யோகம் அசுபமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தில் சுப காரியங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராகு செவ்வாய் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும், எந்த ராசிக்காரர்கள் கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்- மேஷ ராசிக்காரர்களின் மரியாதையும் கௌரவமும் உயரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். பண வரவுகள் இருக்கும்.

மேலும் படிக்க | செவ்வாய் ராசி மாற்றம்: ஜூன் 27 முதல் இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும் 

மிதுனம் - உங்கள் கௌரவம் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சாத்தியமாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம் - கடகம் ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். சமய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். மதப் பயணத்திற்கு யோகம் உண்டாகும். வருமான அதிகரிப்பு சாத்தியமாகும்.

துலாம் - இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணிநிலை மேம்படும். சம்பளம் உயரும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்- இந்த ராசிக்காரர்களுக்கு ரகசிய எதிரிகள் மீது வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஆதாயம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். கட்டிடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்-

ரிஷபம் - ரிஷாப ராசியினர் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசியுங்கள். எதிரிகள் ஆதிக்கம் செலுத்தலாம்.

கன்னி- கன்னி ராசிக்காரர்களுக்கு தேவையில்லாமல் பணம் செலவழிப்பதால் சிரமம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.

மகரம் - மகர ராசியின் இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழில், வியாபாரத்தில் கலவையான பலன்களைப் பெறலாம்.

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு உத்தியோகம் செய்பவர்களின் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வரலாம். வேலை மாற்றம் சாத்தியமாகும்.

மீனம் - மீன ராசிக்காரர்கள் பணச் செலவுகளால் சிரமப்படுவார்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள். ஒருவருடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Lakshmi Narayana Yogam: லக்ஷ்மி நாராயண யோகத்தினால் காதலில் செல்வாக்கு பெறுபவர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News