அஸ்தமித்தது சுக்கிரன்: எந்த ராசிகளுக்கு பிரச்சனை? யாருக்கு ஆதாயம்? இதோ விவரம்

Astrology: சுக்கிரனின் அஸ்தம நிலையால் அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு மாற்றங்கள் ஏற்படும். அனைத்து ராசிகளிலும் சுக்கிரன் கிரகம் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2022, 11:14 AM IST
  • சுக்கிரன் அஸ்தமிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிரிகள் குறைவார்கள்.
  • எதிரிகளின் சதிகள் வீணாகும்.
  • எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.
அஸ்தமித்தது சுக்கிரன்: எந்த ராசிகளுக்கு பிரச்சனை? யாருக்கு ஆதாயம்? இதோ விவரம் title=

சுக்கிரன் அஸ்தமனம், ராசிகளில் அதன் தாக்கம்: உலக இன்பங்களையும், அன்பையும், தாம்பத்ய மகிழ்ச்சியையும் தரும் சுக்கிரன் கிரகம் அக்டோபர் 1ஆம் தேதி காலை 5:05 மணிக்கு அஸ்தமித்தது. நவம்பர் 20 வரை சுக்கிரன் அஸ்தம நிலையில் இருக்கும். இந்த காலத்தில் பொதுவாக, திருமணம், மொட்டை அடித்தல், புது மனை பிரவேசம் போன்ற சுப காரியங்களை சிலர் செய்ய மாட்டார்கள். சுக்கிரன் கிரகத்தின் அமைப்பானது அனைத்து ராசிக்காரர்களின் செல்வம், மகிழ்ச்சி, காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுக்கிரனின் அஸ்தம நிலையால் அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு மாற்றங்கள் ஏற்படும். அனைத்து ராசிகளிலும் சுக்கிரன் கிரகம் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த பதிவில் காணலாம். 

மேஷம் - சுக்கிரன் அஸ்தமிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிரிகள் குறைவார்கள். எதிரிகளின் சதிகள் வீணாகும். எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு கால அவகாசம் ஆகலாம்.

ரிஷபம் - முக்கியமான ஆவணங்களை நன்றாக படித்து பார்த்து பின்னர் முடிவெடுக்கவும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க தாமதம் ஆகலாம். காதல் வாழ்க்கையில் அலட்சியம் இருக்கும்.

மிதுனம் - சொத்து, சுப செலவுகள் குறையும். பயணத்தின் போது கவனமாக இருங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள்.

கடகம் - சோம்பல் அதிகரிக்கும். ஆனால் வெற்றி பெறுவீர்கள். அரசுத் துறையில் லாபம் உண்டு. வீட்டில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். உத்தியோகஸ்தர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் பெரிய பிரச்சினையையும் பேச்சின் மூலம் தீர்த்து வைப்பார்கள். கடன் கொடுக்க வேண்டாம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய விருந்தினர் வரலாம். வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ளுங்கள். சதித்திட்டங்கள் தீட்டப்படலாம். கவனமாக இருங்கள்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி 2022; காத்திருந்தது போதும்... 4 ராசிகளுக்கு இனி விடிவுகாலம்: செல்வம் மழையாக பொழியும்

கன்னி - ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படும். திருமண விஷயத்தில் தாமதம் ஏற்படலாம். வெளிநாட்டில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அரசு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

துலாம் - பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளிலிருந்து விடுபடுவீர்கள். ரகசிய எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது. உங்கள் வணிகத்தை எந்த வித இடையூறும் இல்லாமல் தொடரவும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம் - வேலை அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். ஆனால் முன்னேற்றம் தொடரும். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெற கடுமையாக உழைக்கவும். காதல் வாழ்க்கையில் அலட்சியம் இருக்கும், ஆனால் பின்னர் நல்ல செய்தி கிடைக்கும்.

தனுசு - வேலை வாய்ப்புக்காக எடுக்கும் முயற்சிகள் தாமதமாகவே பலன் தரும். வியாபாரிகளின் லாபம் குறையலாம். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கவனமாக இருங்கள். ஆவணத்தை முழுமையாக படிக்கவும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெறலாம்.

மகரம் - வேலை - வியாபாரத்தில் தொய்வு இருக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். படிப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும். தொண்டு பணிகளில் ஈடுபடுவீர்கள். நெருங்கிய நபர்களே உங்களை பற்றி தவறாக பேசக்கூடும். 

கும்பம் - மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். பதற்றம் நீங்கும். எதிரிகளால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. தேர்வு-நேர்காணலில் வெற்றி பெற, கடினமாக உழைக்க வேண்டும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு திருமணத்தில் தாமதம் ஏற்படலாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் தாமதம் ஏற்படும். உங்கள் திட்டங்களை புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள். கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அக்டோபர் மாதம் அமோகமாக இருக்கப் போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News