5 நாட்களில் பணத்தை அள்ளிக் கொட்டப் போகும் சுக்கிரன்! 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

Shukra Gochar: செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் சின்னமான சுக்கிரன் ஜனவரி 18 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2024, 03:47 PM IST
  • இன்னும் 5 நாட்களில் சுக்கிரனின் சஞ்சாரம்!
  • 3 ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தரும் சுக்கிர பகவான்
  • ஜனவரி 18 முதல் வாழ்க்கையில் மாற்றம்
5 நாட்களில் பணத்தை அள்ளிக் கொட்டப் போகும் சுக்கிரன்! 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் title=

Venus Transit Jan 18: சனாதன தர்மத்தின் படி, சுக்கிரன் சுப கிரகம் ஆகும். சுக்கிரன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களைத் தருவார் என்பது நம்பிக்கை. ஆடம்பரமான வாழ்க்கையையும் செல்வத்தையும் அள்ளித்தரும் சுக்கிரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் போது, ​​தனுசு ராசிக்காரகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்ப்பார்.

ஆனால், தீபாவளிக்கு முன், அதாவது நவம்பர் 3, 2023 அன்று, சுக்கிரன் புதனின் ராசியான கன்னி ராசிக்கு நுழைந்தார். கன்னி ராசியில் வலுவிழந்த நிலையில் இருந்த சுக்கிரன் பலருடைய வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் தரும் கிரகமான சுக்கிரன், தற்போது இந்த புத்தாண்டில் ஜனவரி 18ஆம் தேதி முதல் முறையாக தனுசு ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் காரணமாக 3 ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதோடு, அவர்களின் வீட்டில் எதிர்பாராத செல்வச் செழிப்பும் உண்டாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | Pongal: பொங்கல் கொண்டாட இப்படி ஒரு காரணமா? சங்கராசுரன் வதம்! சங்கராந்தி நம்பிக்கை

சுக்கிரன் சஞ்சாரத்தால் நன்மை பெறும் ராசிகள்
ரிஷபம்

வேலையில் இருப்பவர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். சுக்கிரனின் பெயர்ச்சியால் பலரும் பாராட்டப்படும் செயல்களைசெய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு (Taurus Zodiac Sign) பணியிடத்தில் நல்ல  மதிப்பு கிடைக்கும். உயரதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியும் அன்பும் கிடைக்கும்.

இதனால், சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணை உட்பட குடும்பத்தில் அனைவருடனும் நெருக்கம் ஆழமாகும். சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு இனிவரும் காலம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகப் பணியில் நாட்டம் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் வளங்களை கொண்டுவந்து சேர்க்கும்.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு (Leo Zodiac Sign) சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் உங்களின் தொழிலில் வேகம் கூடும். கடின உழைப்பால் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. குடும்பத்தில் இருந்துவந்த மனகசப்புகள் நீங்கி, உறவு மேம்படும்.

இந்த காலகட்டம் எதிர் பாலினத்தவர் மீது உங்கள் ஈர்ப்பை அதிகரிக்கும், தொழில் செய்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல காலம் இது. பண லாபம் மட்டுமல்ல, நல்ல பெயரும் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் நிறைவேறும். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு அருள்.... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்​

துலாம்

ஜனவரி 18ம் தேதி நடைபெறவிருக்கும் சுக்கிரனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு (Libra Zodiac Sign) வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நிறைய வாய்ப்புகளைத் தரும். உங்கள் சகோதர சகோதரிகளுடனான உறவுகள் மேம்படும். கடின உழைப்பு மற்றும் செயல்களுக்காக உங்கள் முதலாளி உங்களைப் பாராட்டுவார். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துத்துங்கள்.

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஓவியம் அல்லது இசை போன்ற கலை விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்ல மாற்றத்தைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், வெற்றி...அனைத்தும் பொங்கும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News