சிவபெருமானை மகிழ்விக்க பல விரதங்கள் கடைபிடிக்கப்படுகின்றன, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வரும் மகாசிவராத்திரி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மஹாசிவராத்திரி விழா, மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சிவ பக்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் மகாதேவன் மற்றும் பார்வதியை முறைப்படி வழிபடுவது பக்தர்களின் அனைத்து துன்பங்களையும் நீக்குகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 18ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நாளில் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம், பக்தர்களின் மனதில் உள்ள அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். இ
மகாசிவராத்திரி அன்று செய்ய வேண்டிய சில பரிகாரங்கள்
- ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு சுத்தமான நீரால் அபிஷேகம் செய்யவும்.. அப்போது, சிவலிங்கத்தின் மீது தண்ணீர் சமர்ப்பிக்கும் போது, ஓம் நம சிவாய மந்திரத்தை உச்சரிக்கவும். அதன் பிறகு சிவபெருமானின் முன் 11 விளக்குகளை ஏற்றி உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள். இதன் மூலம் மகாதேவன் உங்கள் ஆசைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவார்.
- திருமண தடைகள் நீங்க, சிவராத்திரி தினத்தன்று பாலில் குங்குமம் கலந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும். மேலும், அன்னை பார்வதிக்கு சிவப்பு நிற மலர்களை அர்ப்பணிக்கவும். இது அனைத்து பிரச்சனைகளையும் நீக்குகிறது.
- ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகாசிவராத்திரி அன்று 21 வில்வ இலைகளை பறித்து, பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவி, சந்தனத்தால் அதன் மீது ஓம் நம சிவாயம் என்று எழுதுங்கள். இப்போது இந்த இலைகளை சிவலிங்கத்தின் மீது சமர்ப்பிக்கவும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் சிவபெருமானின் அருள் என்றென்றும் நிலைத்திருக்கும்.
- சாஸ்திரங்களின்படி சிவபெருமானின் வாகனம் காளை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மகாசிவராத்திரி அன்று காளைக்கு தீவனம் கொடுங்கள். அல்லது பசு காப்பகத்திற்கு பணம் கொடுத்து வாருங்கள். இதனால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியும், செழுமையும் இருக்கும்.
- மஹாசிவராத்திரி நாளில் தேவைப்படுபவர்களுக்கு தானியங்களை தானம் செய்வது மங்களகரமானது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவளிக்கவும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அன்னபூரணியின் அருள் உங்கள் மீது நிலைத்திருக்கும்.
மேலும் படிக்க | மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகங்கள்’!
- இன்று செம்புப் பாத்திரத்தில் உள்ள சுத்தமான நீரில் கருப்பு எள்ளைக் கலந்து சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்தால் சனி தோஷம் நீங்கும். இத்துடன் முன்னோர்களின் ஆன்மாவும் சாந்தி அடையும்.
- மகாசிவராத்திரியின் சிறப்பு நாளில், சிவலிங்கத்தை எடுத்து வந்து, சடங்குகளுடன் வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் நிறுவவும். இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும்.
- மஹாசிவராத்திரி அன்று கோதுமை மாவில் 11 சிவலிங்கங்களை உருவாக்கி, சுத்தமான நீரால் அபிஷேகம் செய்யவும். இந்த சிவலிங்கத்தின் அளவு கட்டை விரலை விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அபிஷேகம் செய்த பிறகு, இந்த சிவலிங்கத்தை ஆற்றில் கரைக்க வேண்டும்.
- சிவராத்திரி இரவில் வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் விளக்குகளை ஏற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக மாகாதேவனை பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் சிவபெருமானின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பாவங்களை போக்கும் மகாசிவராத்திரி பூஜை! செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்!
மேலும் படிக்க | Maha Shivratri 2023: மகாசிவராத்திரி விரதத்தில் என்னென்ன சாப்பிடலாம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ