50 ஆண்டுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிக்காரர்களுக்கு குபேர வாழ்க்கை

Vipareetha Rajayogam 2023 in Tamil: ஜோதிடத்தில், விபரீத ராஜயோகம் மிகவும் சிறப்பானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. கிரகங்களின் சிறப்பு நிலையால் உருவாகும் விபரீத ராஜயோகம் ஒரு நபரை ஒரு நிமிடத்தில் பணக்காரர் ஆக்கிவிடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 10, 2023, 12:15 PM IST
  • விபரீத ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமானது.
  • தொழிலில் ஏற்றம் உண்டாகும். பதவி, மரியாதை கிடைக்கும்.
  • வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
50 ஆண்டுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிக்காரர்களுக்கு குபேர வாழ்க்கை title=

விபரீத ராஜயோகம் 2023: கிரகங்களின் நிலைகள் பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகங்கள் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நேரத்தில், கிரகங்களின் நிலை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, ஏனெனில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு அரிய நிகழ்வு ஒன்று உருவாக்குகிறது. இந்த நேரத்தில் சனி, ராகு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலைகள் விபரீத ராஜயோகத்தை உருவாக்குகின்றன. விபரீத ராஜயோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த விபரீத ராஜயோகம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக அமையும். இந்த ராசிக்காரர்கள் திடீரென்று நிறைய பணம் பெறலாம். இந்த ராசிக்காரர்கள் விரைவில் பணக்காரர்களாக மாறுவார்கள். இவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள். எனவே விபரீத ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

விபரீத ராஜயோகம் எப்படி உருவாகிறது? 
ஒரு ஜாதகத்தில் 6, 8 மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதிகள் ஒரே நேரத்தில் மற்ற இரண்டு கிரகங்களின் வீடுகளில் இருக்கும் போது விபரீத ராஜயோகம் உருவாகிறது. அதாவது 6 ஆவது வீட்டின் அதிபதி, 8 அல்லது 12 ஆவது வீட்டில் இருந்தால் அல்லது 12 ஆவது வீட்டின் அதிபதி 6 அல்லது 8 ஆவது வீட்டில் இருக்கும் போது உருவாகும்.

மேலும் படிக்க | உதயமாகும் சுக்கிரனால், ‘3’ ராசிகளின் கவலைகள் அஸ்தமனமாகும்! பணப் புயல் அடிக்குமா?

விபரீத ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்

மேஷ ராசி- விபரீத ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமானது. இவர்களது வாழ்வில் இருந்த பிரச்சனைகள், துன்பங்கள் இனிமேல் முடிவுக்கு வரும். மன அழுத்தம் நீங்கும். நீங்கள் அமைதியை பெறுவீர்கள். திடீரென்று எங்கிருந்தாவது பணம் வரவு ஏற்படும். இந்த பண ஆதாயம் உங்கள் நிதி நிலையில் ஏற்றம் தரும். நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவீர்கள்.

சிம்ம ராசி- விபரீத ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். நீங்கள் சொத்து பெறலாம் அல்லது சொத்து மூலம் பணம் பெறலாம். நீங்கள் பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள், உங்கள் வாழ்க்கையை மாற்றுவீர்கள். தொழிலில் ஏற்றம் உண்டாகும். பதவி, மரியாதை கிடைக்கும்.

துலாம் ராசி- 50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் விபரீத ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பங்குச்சந்தையில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இந்த நேரம் எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும்.

மகர ராசி- விபரீத ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்திகளைத் தரும். பல கிரகங்களில் இருந்து கிடைக்கும் சுப பலன்கள் பல நன்மைகளை தரும். வாழ்க்கையில் புதிய காதல் மலரும். அதேபோல் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூக அந்தஸ்து உயரும். உங்களின் கருத்துக்கள் இக்காலத்தில் மிகவும் மதிக்கப்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News