திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறும்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான், எந்த ராசிக்கு என்ன சனியாக வர உள்ளார். அதனால் எந்த ராசியினர் சுப மற்றும் அசுப பலன்கள் அதிகம் பெறுவார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 18, 2023, 01:18 PM IST
  • திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான்.
  • எந்த ராசிக்கு சுப மற்றும் அசுப பலன்கள் அதிகம்.
  • சனியிடமிருந்து விடுதலைப் பெறப்போகும் ராசிகள்.
திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறும் title=

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப் பெயர்ச்சி நேற்று ஜனவரி 17ம் தேதி மாலை 6.04 மணிக்கு நடைபெற்றது. இதனால் நேற்று திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் இந்த சனிப் பெயர்ச்சி மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு நடந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான் எந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலனை தருவார் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்- எதிர்பாராத வருமானம் அதிகரிக்கும். பணம் பெற புதிய வழிகள் அமையும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். 

ரிஷபம்- தொழில்-வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு கிடைக்கும். மகிழ்ச்சிகள் வந்து சேரும். 

மேலும் படிக்க | Lakshmi Kadaksham: வீட்டில் லட்சுமி கடாட்சம், செல்வம் பெருக என்ன செய்வது?

மிதுனம்- வேலை மாற்றம் நடக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வதில் ரிஸ்க் எடுக்கலாம். தந்தையுடனான உறவு கெடலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். 

கடகம்- மன உளைச்சல் இருக்கும். பிஸியாக இருப்பீர்கள். பணத்தால் நன்மை உண்டாகும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் ஏற்படலாம். 

சிம்மம்- வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். 

கன்னி- கடன் தொல்லைகள் ஏற்படலாம். கடினமாக உழைத்து அதற்கான பலனைப் பெறுவீர்கள். 

துலாம்- மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். 

விருச்சிகம்- குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டி வரும். சொத்து வாங்கும் திட்டம் நிறைவேறும்.

தனுசு- உத்தியோகத்தில் நல்ல நேரம், சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு காணலாம். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். 

மகரம்- பல நன்மைகளைப் பெறுவீர்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். பெரிய அளவில் சேமிக்க முடியும். சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

கும்பம்- உத்தியோகத்தில் லாபம் உண்டாகும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு  தொல்லையை கொடுக்கலாம்.

மீனம்- செலவுகள் அதிகரிக்கும். நோய்களுக்கான சிகிச்சைக்கு செலவுகள் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து பணவரவு கிடைக்கும். நீண்ட பயணம் செல்லலாம். மன உளைச்சல் ஏற்படும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | புதன் கொடுக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்! பணத்தில் புரளும் 4 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News