குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2024: நிகழவிருக்கும் மங்களகரமான குரோதி வருடம் தமிழ் புத்தாண்டு அதாவது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. இந்த குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களின் மாற்றம் ஏறப்படப்போகிறது. அதன்படி மே 1ஆம் தேதி சித்திரை மாதம் 18 குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதேபோல் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அதிசார சனியால் குரோதி ஆண்டின் இறுதியில் ராகு சனி சேர்க்கை ஏற்படப்போகிறது. இந்நிலையில் இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: குரோதி தமிழ் புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு யோகம் உங்களைத் தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிரிகள் தொல்லை ஒரேடியாக நீங்கும். சொந்த வீடு, நிலம் வாங்கலாம். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி சாதகமாக அமையும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்: குரோதி தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். ஆலய தரிசனம் செய்வீர்கள். ஆன்மீக பயணங்களால் ஆதாயம் உண்டாகும், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்: குரோதி தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றங்களைத் தரப்போகிறது. வேலையை இழந்தவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தடைபட்ட சுபகாரியங்கள் இனி மளமளவென நடைபெறப்போகிறது. தொழிலாளி முதலாளி ஆகலாம். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும் கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.
மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமோகமான பண வரவு, லாபம், ஆடம்பர வாழ்க்கை
கடகம்: குரோதி தமிழ் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். வரவேண்டிய பணம் தக்க நேரத்தில் வந்து சேரும். கடன் தொல்லை ஒரேடியாக முடிவடையும். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்திலும் வேலையிலும் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மாணவர்களுக்கு விரும்பும் உயர்கல்வி தேடி வரும். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது.
சிம்மம்: குரோதி தமிழ் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சொத்து, வண்டி வாகனம் வாங்கலாம். புதிய பதவிகள் தேடி வரும். சிலருக்கு வீடு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. கடன் தொல்லை நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் குரோதி ஆண்டில் ஒன்று சேருவார்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரோதி தமிழ் புத்தாண்டு பயண யோகத்தை தரும். தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் இந்த குரோதி தமிழ் புத்தாண்டில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும்.கணவன் மனைவி உறவு பலப்படும்.
விருச்சிகம்: குரோதி தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.
தனுசு: குரோதி தமிழ் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்கள் நீண்ட நாள் நோயிலிருந்து விடுப்படுபவார்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மகரம்: குரோதி தமிழ் புத்தாண்டில் மகர ராசிக்காரர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு வெற்றிகரமான முடிவுகள் கிடைக்கும். திருமணம் கைகூடி வரும்.
கும்பம்: குரோதி தமிழ் புத்தாண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு வேலையில் இடம் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். இந்த ஆண்டு நீங்கள் நலத்தையும் வளத்தையும் பெறுவீர்கள்.
மீனம்: குரோதி தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு தைரியத்தை தரும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் இப்போது நிறைவேறும். இடம் வாங்கி வீடு கட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ