கருவின் உள்ள குழந்தையின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்... கருட புராணம் கூறுவது என்ன!

கருட புராணத்தில், பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றுடன் அறிவு, அறிவியல், நெறிமுறைகள் தொடர்பான பல முக்கிய விஷயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2023, 06:06 PM IST
  • கர்ப்ப காலத்தில் சத்தான உணவை உட்கொள்ளுமாறு கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
  • கருட புராணத்தில், கர்ப்பம் முதல் பிறப்பு வரை, கருவின் எண்ண ஓட்டம் குறித்து கூறப்பட்டுள்ளது.
  • கருப்பையில் இருந்து பிறப்பு வரை சுழற்சி பற்றி கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.
கருவின் உள்ள குழந்தையின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்... கருட புராணம் கூறுவது என்ன! title=

கருட புராணம் இந்து மதத்தின் 18 மகாபுராணங்களில் ஒன்றாகும். இதில் விஷ்ணு சொன்ன விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றுடன் அறிவு, அறிவியல், நெறிமுறைகள் தொடர்பான பல முக்கிய விஷயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் தொடர்பான பல விஷயங்கள் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவ அறிவியலைப் பற்றி பேசுகையில், கர்ப்ப காலத்தில் சத்தான உணவை உட்கொள்ளுமாறு கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் மருத்துவ அறிவியலின் படி கர்ப்ப காலத்தில் தாய் உண்ணும் உணவு கருவுக்கு சென்று குழந்தை வளருகிறது. இந்த விளக்கம் கருட புராணத்திலும் உள்ளது. கருட புராணத்தில், கர்ப்பம் முதல் பிறப்பு வரை, கருவின் எண்ண ஓட்டம் குறித்து கூறப்பட்டுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மனதில் என்னென்ன எண்ணங்கள் வரும், கடவுளிடம் எப்படி பேசுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கருப்பையில் இருந்து பிறப்பு வரை சுழற்சி பற்றி கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்

ஒரு இரவு முதல் பத்து நாட்கள் வரை உள்ள கரு

கருட புராணத்தின் படி, ஒரு இரவின் உயிரினம் ஒரு நுண் துகள் போன்றது, ஐந்து இரவுகளில் உள்ள உயிரினம் ஒரு குமிழி போன்றது, பத்து நாட்களில் அது ஒரு பேரீச்சம் பழம் போன்றது. இதற்குப் பிறகு, அது ஒரு சதைப்பகுதியின் வடிவத்தை எடுத்து ஒரு முட்டை போல் மாறும்.

ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையிலான கரு

கருடபுராணத்தில், குழந்தை வயிற்றில் ஒரு மாதமாக இருக்கும் போது, ​​இரண்டாவது மாதத்தில் தலை, கைகள் போன்ற உறுப்புகள் மற்றும் முடி, எலும்பு, ஆண்குறி, ஆகியவையும் மூன்றாவது மாதத்தில் நகங்களும் இதனுடன் காது, மூக்கு போன்ற உறுப்புகள் உருவாகத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Astro: கிரக தோஷங்களை நீக்கி, செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் ‘கருமஞ்சள்’ பரிகாரங்கள்!

நான்காவது மாதம் முதல் ஆறாம் மாதம் வரையிலான கரு

கருடபுராணத்தின்படி சதை, ரத்தம், கொழுப்பு போன்றவை கருவின் தோலில் உருவாகும். ஐந்தாவது மாதத்தில் குழந்தைக்கும் பசி எடுக்க ஆரம்பித்து ஆறாவது மாதத்தில் குழந்தை தாயின் வயிற்றில் நகர ஆரம்பிக்கிறது. வயிற்றில் தாய் சாப்பிட்ட உணவை குழந்தை எடுக்க ஆரம்பிக்கிறது.

ஏழு மாத கரு

ஏழாவது மாதத்தில் இருந்து குழந்தை அறிவு பெற ஆரம்பிக்கிறது. கருவில் இருக்கும் போதே சிந்திக்கத் தொடங்கி, சிந்திக்கும் போதே வயிற்றில் சுற்றித் திரியும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஏழாவது மாதத்தில், குழந்தை சோகத்துடனும் ஆர்வமின்மையுடனும் கடவுளைத் துதிக்கத் தொடங்குகிறது. குழந்தை வயிற்றில் இருக்கும் கடவுளிடம் பேசி, நான் இனி இந்த வயிற்றில் இருந்து பிரிந்து இருக்க விரும்பவில்லை, ஏனென்றால் நான் வெளியே வந்த பிறகு நான் பாவச் செயல்களைச் செய்ய வேண்டியிருக்கும், அது என்னை நரகத்திற்கு அழைத்துச் செல்லும், நான் வெளி உலகை பார்க்க விரும்பவில்லை என்று கரு வேண்டுவதாக கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.   

ஒன்பது மாத கரு

கரு ஒன்பது மாதங்கள் நிறைவடைந்து, பிரசவத்திற்கு பிறகு, வெளிக்காற்றை சுவாசிக்கத் தொடங்குகிறது. தாயின் வயிற்றில் இருந்து பிரிந்த பிறகு, குழந்தை. தாயின் கருவில் உள்ள விஷயங்களை நினைவில் கொள்ளாமல் போகிறது என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News