சூரியப் பெயர்ச்சி 2024: 2024 ஆம் ஆண்டு முதல் முறையாக சூரியன் தனது ராசியை மாற்றியுள்ளார். அதன்படி சூரியன் பெயர்ச்சியாகி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜனவரி 15, 2024 அதாவது இன்று முதல் பிப்ரவரி 13, 2024 வரை, சூரியன் தனது மகனான சனியின் ராசியில், அதாவது மகர ராசியில் பயணிப்பார். ஜோதிடத்தின்படி, சூரியனுக்கும் சனிக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. எனவே, மகர ராசியில் சூரியன் இருப்பது 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப் பட்ட பலனைத் தரப் போகிறது என்பதை இங்கே காண்போம்.
ராசிகளில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம்:
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் / பெயர்ச்சி சாதகமாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வமும் சொத்தும் கிடைக்கும். மூத்தவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். உங்கள் பணி பாராட்டப்படும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சுற்றுலா செல்லலாம். சர்ச்சைக்குரிய அனைத்து விஷயத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்: திடீர் பண ஆதாயம் உண்டாகும். புதிய மூலங்களிலிருந்து பணம் வந்து சேரும். உங்களின் சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். வேலையில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் அமையும்.
கடகம்: இந்த நேரத்தை கவனமாக பயன்படுத்தவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உறவுகளில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.
சிம்மம்: மாணவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி: உங்கள் பணி பாராட்டப்படும். பண வரவுக்கு புதிய வழிகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். வீட்டிலும் நல்ல சூழ்நிலை இருக்கும்.
துலாம்: எதிர்பாராத சவால்களை சந்திக்க நேரிடும். அமைதியின்மை ஏற்படும். தெரியாத பயம் உங்களை தொந்தரவு செய்யும். நிதி விஷயங்களில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
விருச்சிகம்: உங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். சொத்து மூலம் லாபம் பெறலாம். நிலம், வாகனம் ஆகியவற்றால் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் சமய நிகழ்வுகள் நடைபெறலாம்.
தனுசு: இந்த பெயர்ச்சி பிறகு உங்களுக்கு சரியான நேரமாக இருக்கும் என்று கூற முடியாது. குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மை இருக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். செலவுகள் இருக்கும் மற்றும் உங்களுக்கு பணம் தேவைப்படலாம்.
மகரம்: மகர ராசிக்காரர்களிடம் சூரிய பகவான் கருணை காட்டுவார். தடைபட்ட வேலைகள் வெற்றி பெறும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வரலாம்.
கும்பம்: பணிச்சுமை அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
மீனம்: நிதி ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கலாம். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ