சனி வக்ர பெயர்ச்சி: ராஜயோகத்தின் பலனால் 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. ஓஹோன்னு இருப்பாங்க!!

Shani Vakri: சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2023, 04:20 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் ஷஷ ராஜ யோகம் உருவாகி வருகிறது.
  • இக்காலத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
சனி வக்ர பெயர்ச்சி: ராஜயோகத்தின் பலனால் 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. ஓஹோன்னு இருப்பாங்க!! title=

சனி வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும் போதும், இயக்கங்களை மாற்றும்போதும், அஸ்தமன, உதய நிலைகளை அடையும் போதும், அதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படுகின்றது. சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார். மேலும் அவர் மிக முக்கியமான கிரகமாகவும் கருதப்படுகிறார். மக்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் அவர் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். 

ஆகையால் சனி பகவானின் சிறிய மாற்றங்களும் ராசிகளில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். அவரது அருள் பார்வை ஒருவர் மீது பட்டால், அவர் வாழ்வில் அனைத்து வித நன்மைகளையும் அடைகிறார். அவர் தன் எதிரிகளை வெற்றிபெற்று உயர் நிலையை அடைகிறார். ஆகையால் நாம் நமது செயல்களை நல்ல செயல்களாக செய்தால், சனி பகவான் நமக்கு அளிக்கும் பலன்களும் நல்ல பலன்களாகவே இருக்கும்.   

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சனி தனது அசல் திரிகோண ராசியான கும்பத்தில் பெயர்ச்சியானார். 2025 ஆம் ஆண்டு வரை சனி கும்ப ராசியில் தான் இருக்கப் போகிறார். இதற்கிடையில் சனி தன் போக்கையும் அவ்வப்போது மாற்றுவார். சனி பகவான் ஜூன் 17 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையப்போகிறார். நவம்பர் 4 ஆம் தேதி வரை அவர் இந்த நிலையில் இருப்பார். சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சனி பகவான் வக்ர பெயர்ச்சி காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றுவார்

சிம்ம ராசி

ஜோதிட சாஸ்திரப்படி ஜூன் 17ஆம் தேதி கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த காலத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இதன் காரணமாக உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றம் அனுகூலமான பல வாய்ப்புகளை அள்ளித் தரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி காண்பீர்கள். 

மேலும் படிக்க | வரும் 486 நாட்கள் குருவால் இந்த ராசிகளுக்கு லாட்டரி, ராஜ வாழ்க்கை

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் ஷஷ ராஜ யோகம் உருவாகி வருகிறது. இக்காலத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். இந்த நேரத்தில் வீடு, நிலம் அல்லது வாகனம் போன்றவற்றை வாங்கலாம். எதிர்காலத்தில் லாபம் தரக்கூடிய பல ஒப்பந்தங்கள் தற்போது வெற்றிகரமாக இறுதி செய்யப்படும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். 

கும்ப ராசி

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் கும்ப ராசியில்தான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக இந்த ராசியில் ஷஷ ராஜயோகம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிகப்படியான பலன்களை அளிக்கும். பழைய பிரச்சனைகள் விரைவில் நீங்கும். மறுபுறம், வேலை செய்பவர்கள் புதிய வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நிதி ஆதாயம் கிடைக்கும். முடங்கியிருந்த அவர்களின் பணிகள் மீண்டும் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. கும்ப ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்னும் 24 மணி நேரத்தில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 'ஆஹா' பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News