செவ்வாய் தோஷம் இருக்கிறதா: கல்யாணக் காரகர் எந்த பாவகத்தில் இருக்கக்கூடாது

திருமண பொருத்தம் பார்ப்பதில் செவ்வாய் தோஷம் முக்கிய காரணியாக இருக்கிறது. செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருந்தாலும், இல்லை என்று சொல்வதற்கான காரணங்கள் இவை....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2022, 06:27 AM IST
  • திருமண பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் முக்கியமானது
  • செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருக்கிறதா
  • செவ்வாய் தோஷ பரிகாரங்கள் என்ன
செவ்வாய் தோஷம் இருக்கிறதா: கல்யாணக் காரகர் எந்த பாவகத்தில் இருக்கக்கூடாது title=

திருமணம் செய்வதற்காக ஜாதகப் பொருத்தம் பார்ப்பவர்கள், முதலில் கவனிப்பது பெண் அல்லது மாப்பிள்ளையின் ஜாதகத்தில் செவ்வாய் சாதகமாக உள்ளதா இல்லை தோஷமாக இருக்கிறது என்பதாகும். 

பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகிய இடங்களில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய பாவகங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அதை செவ்வாய் தோஷ ஜாதகம் என்று குறிப்பிடுவார்கள்.

ஆனால் செவ்வாய் தோஷம் என்பதை திருமணத்திற்கு என்று பார்க்கும்போது, மேற்கூறிய இடங்களில் செவ்வாய் இருப்பதை தோஷமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஜாதகத்தின் வேறு சில காரணிகளையும் கவனிக வேண்டும். செவ்வாய் தோஷ நிவர்த்தி என்பது ஜாதகத்திலே இயல்பாகவே இருக்கும் அமைப்பும் உண்டு.

ஒரு லக்கினத்துக்கு செவ்வாய் கேந்திராதிபதியாகவும், திரிகோணாதிபதியாகவும் இருக்கும் ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் என்ற ஒன்றே இல்லை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மேலும் படிக்க | ஜூலை மாத கிரக மாற்றங்களால் குபேரனின் அருளை முழுமையாக பெறப்போகும் சில ராசிகள் 

இதற்கு காரணம் செவ்வாய் வலுவாக இந்த இரு நிலையிலும் இருப்பவர்களுக்கு செவ்வாய் கிரகம் யோகத்தைக் கொடுக்கும் யோககாரகனாக இருக்கும்போது செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 

கடக லக்னத்துக்கு ஐந்தாமிடமாகிய விருச்சிகம், 10 ம் இடமாகிய மேஷம் இரண்டுக்கும் அதிபதி செவ்வாயாக இருப்பவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. அதேபோல, கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று பொருள் கொள்ளலாம்.

ஜாதகத்தில் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருந்து அது மிதுனம் அல்லது கன்னியாக இருந்துவிட்டால், செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகம் என்று சொல்லலாம். சிம்ம லக்னத்திற்கு நான்காம் இடம் விருச்சிகம், ஒன்பதாம் இடம் மேஷம் இரண்டுக்கும் அதிபதி செவ்வாயாக இருந்தாலும் தோஷம் இல்லை.

ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ஏழாம் இடம் கடகம் அல்லது மகரமாக இருந்தாலும் ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இல்லை. அதேபோல, செவ்வாய் இருக்குமிடம் ஜாதகத்தின் நான்காம் இடமான மேஷம் மற்றும் விருச்சிகம் எனில் ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் என்பது இல்லை.

மேலும் படிக்க | ஆகஸ்ட் 10 வரை மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களுக்கு அலர்ட்

ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் 12ம் இடம் ரிஷபம் அல்லது துலாம் என்று இருந்தால் தோஷம் இல்லை என்பதுபோல, ஜாதகத்தில் குருவுடன் செவ்வாய் இணைந்திருந்தால் தோஷமில்லை. செவ்வாய் இருக்கும் எட்டாம் இடம் தனுசு, மீனமாக இருந்தாலும் செவ்வாய்தோஷம் இல்லை என்றே சொல்லலாம்.

ஜாதகரின் திருமண காலத்திற்கு முன்பே செவ்வாய் தசை கடந்து போயிருந்தால் செவ்வாய் தோஷம் பாதிப்பு  திருமணத்தில் இருக்காது என்பதால் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது செவ்வாய் தோஷ ஜாதகத்தை இணைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

செவ்வாயின் நட்சத்திரமான மிருகஷீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே செவ்வாய் தசை கடந்து போய்விடும் என்பதால் செவ்வாய் தோஷம் இல்லை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் ராசிகள் இவை: உங்க ராசி என்ன 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News