ரோகிணியில் இருந்து குரு கொடுக்கும் நன்மைகள்! 4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்!

Guru Nakshatra Peyarchi June 13 :  குருvin நட்சத்திர பெயர்ச்சியால் அதிகப்படியான பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 13, 2024, 05:05 PM IST
  • குரு நட்சத்திர பெயர்ச்சி யாருக்கு சாதகம்?
  • ஊதிய உயர்வு-பதவி உயர்வு பெறும் ராசிகள்
  • திருமணத் தடை நீங்கும் ராசிகள்
ரோகிணியில் இருந்து குரு கொடுக்கும் நன்மைகள்! 4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்! title=

Guru Nakshatra Peyarchi: கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் பெயர்ச்சிகளைத் தவிர, கிரகங்களின் நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்களின் உதயம் மற்றும் அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்துமே மனிதர்களின் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  

குரு பகவான் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுகிறார். தேவகுருவான குரு பகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜூன் 13ஆம் தேதி குரு நட்சத்திர பெயர்ச்சி அடைந்துள்ளார். குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். குரு, நட்சத்திர பெயர்ச்சியடைந்து ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 20 வரை குரு இருப்பார்.

குருப் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிக நன்மைகள் நடக்கும், அதாவது பண வரவு அதிகமாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் தங்குத்தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும். அதற்கு காரணம் தேவகுரு ரோகிணி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளது தான்.

மேலும் படிக்க | புதாதித்ய யோகத்தால் தலைவிதியை மாற்றலாம்! உங்களை புத்திசாலியாக்கும் யோகம்...

மகிழ்ச்சி, செழிப்பு, மரியாதை மற்றும் அறிவைக் கொடுக்கும் குரு, வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல குரு பகவானின் நட்சத்திர மாற்றமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் 4 ராசிக்காரர்களின் வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி கிடைக்கும். 

ரிஷபம்

ரோகிணி நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சாரம் செய்வதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உயர் பதவி, பணம், கௌரவம்  என சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்திலும் நண்பர்களிடத்திலும் உறவுகள் மேம்படுவதற்கான சூழ்நிலைகள் மேம்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கான காலம் இது. அறிவுசார் துறைகளில் ஆர்வம் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திரப்பெயர்ச்சி பல பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த மாற்றம் சாதகமாக இருக்கும், விரும்பிய வேலையைச் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நல்ல நேரம் இது. முதலீடு செய்வதற்கான நேரம் இது. எதிர்காலத்தில் பெரிய பலன்களைத் தரும் முதலீடாக இருக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | Daily Rasipalan: ஜூன் மாதம் 13: க்ரோதி ஆண்டு வைகாசி 31ம் நாளுக்கான ராசி பலன்கள்!

கன்னி

 ரோகிணி நட்சத்திரத்தில் வியாழன் நுழைவது கன்னி ராசியினருக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்கள் காத்திருக்கின்றன. எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் ஆதாயம் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கும் குரு பல நன்மைகளைத் தருவார். வருமானம் கூடும். சம்பள உயர்வு, பதவி உயர்வு என நல்ல செய்திகள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும், ஈடுபாடுள்ள துறையிலும் வெற்றி கிடைக்கும் நேரம் இது. சமூகத்தில் மரியாதை கிடைக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | லட்சுமி நாராயண யோகத்தால் நினைத்தது நடக்கும்! தொட்டது துலங்கும்! ஜாலியாகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News